சொல் பொருள்
(பெ) 1. பார்க்க : பொலம், 2. பொன்னைப்போன்றது,
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : பொலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
golden
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொடி அழல் புறந்தந்த பூவா பூ பொலன் கோதை – கலி 54/2 நீறு பூத்த நெருப்பினால் செய்யப்பட்ட பூவாத பூவாகிய பொன் மலர் மாலையையும் நன்றே காதலர் சென்ற ஆறே நிலன் அணி நெய்தல் மலர பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே – ஐங் 435 நலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி! நிலத்தை அழகுசெய்யும் நெய்தல்பூக்கள் மலர, பொன்னைப்போல் அழகிய கொன்றையையும் பிடவத்தையும் கொண்டுள்ளது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்