Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பார்க்க : பொலம், 2. பொன்னைப்போன்றது,

சொல் பொருள் விளக்கம்

பார்க்க : பொலம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

golden

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பொடி அழல் புறந்தந்த பூவா பூ பொலன் கோதை – கலி 54/2

நீறு பூத்த நெருப்பினால் செய்யப்பட்ட பூவாத பூவாகிய பொன் மலர் மாலையையும்

நன்றே காதலர் சென்ற ஆறே
நிலன் அணி நெய்தல் மலர
பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே – ஐங் 435

நலம் மிக்கதே, நம் காதலர் சென்ற வழி!
நிலத்தை அழகுசெய்யும் நெய்தல்பூக்கள் மலர,
பொன்னைப்போல் அழகிய கொன்றையையும் பிடவத்தையும் கொண்டுள்ளது.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.