சொல் பொருள்
பொள்ளல் – சின்னஞ்சிறு நுண் துளை
பொத்தல் – பெரிய துளை அல்லது ஓட்டை
சொல் பொருள் விளக்கம்
பொள்ளலில் நீர் கசியும்; பொத்தலில் நீர் ஒழுகும். ஆதலால் மண்கலம் வாங்குவார் பொத்தல் பொள்ளல் கீறல் முதலியவை உண்டோ எனத் தட்டிக் கொட்டிப் பார்த்தே வாங்குவது வழக்கம். “பொள்ளெனப் புறம் வேர்த்தலைப்” புகல்வார் வள்ளுவர்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்