Skip to content

சொல் பொருள்

(பெ) 1. காலம், நேரம், 2. தக்க சமயம், 3. சூரியன்,  4. நாள்,

சொல் பொருள் விளக்கம்

காலம், நேரம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

time, opportune moment, sun, day

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள் – முல் 55

காலத்தை அளந்து அறியும், உண்மையே பேசுகின்ற மக்கள்

இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே – நற் 3/8,9

இனியவள்,
மனைக்கு மாட்சிதரும் விளக்கினை ஏற்றிவைத்து நம்மையும் நினைத்துப்பார்க்கும் நேரம் இது என்று

நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு
உள்ளினிர் சேறிர் ஆயின் பொழுது எதிர்ந்த
புள்ளினிர் மன்ற என் தாக்குறுதலின் – மலை 64-66

நன்னன் மகனான நன்னனை நினைத்த உறுதிப்பாட்டுடன்
(அவனையே)நினைத்தவராக (அவனிடம்)சென்றடைந்தால், நல்லநேரத்தை எதிர்கொண்ட
(பறவையால் தோன்றிய)நல்ல சகுனம் பெற்றவர் ஆவீர், எம்மைச் சந்தித்ததால் –

இன மணி ஒலிப்ப பொழுது பட பூட்டி – நற் 187/4

வரிசையான மணிகள் ஒலிக்க, சூரியன் சாய தேரில் குதிரையைப் பூட்டி

வெ வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது
உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய – பதி 68/5,6

கண்டோர் விரும்பும் அழகிய கோலங்கள் நிலையாய் அமைந்த பகைவர் மதிலை அழித்தாலொழிய
உண்பதில்லை என்று அடுக்கிக்கொண்டே சென்ற நாள்கள் பல கழிய,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *