சொல் பொருள்
(பெ) 1. காலம், நேரம், 2. தக்க சமயம், 3. சூரியன், 4. நாள்,
சொல் பொருள் விளக்கம்
காலம், நேரம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
time, opportune moment, sun, day
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள் – முல் 55 காலத்தை அளந்து அறியும், உண்மையே பேசுகின்ற மக்கள் இனியோள் மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே – நற் 3/8,9 இனியவள், மனைக்கு மாட்சிதரும் விளக்கினை ஏற்றிவைத்து நம்மையும் நினைத்துப்பார்க்கும் நேரம் இது என்று நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு உள்ளினிர் சேறிர் ஆயின் பொழுது எதிர்ந்த புள்ளினிர் மன்ற என் தாக்குறுதலின் – மலை 64-66 நன்னன் மகனான நன்னனை நினைத்த உறுதிப்பாட்டுடன் (அவனையே)நினைத்தவராக (அவனிடம்)சென்றடைந்தால், நல்லநேரத்தை எதிர்கொண்ட (பறவையால் தோன்றிய)நல்ல சகுனம் பெற்றவர் ஆவீர், எம்மைச் சந்தித்ததால் – இன மணி ஒலிப்ப பொழுது பட பூட்டி – நற் 187/4 வரிசையான மணிகள் ஒலிக்க, சூரியன் சாய தேரில் குதிரையைப் பூட்டி வெ வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய – பதி 68/5,6 கண்டோர் விரும்பும் அழகிய கோலங்கள் நிலையாய் அமைந்த பகைவர் மதிலை அழித்தாலொழிய உண்பதில்லை என்று அடுக்கிக்கொண்டே சென்ற நாள்கள் பல கழிய,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்