Skip to content

சொல் பொருள்

(பெ) 1. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற மகளிர் குணங்கள் நான்கனுள் ஒன்று. 2. பேதைமை, கபடமின்மை, 3. மென்மை, 4. அறியாமை,

சொல் பொருள் விளக்கம்

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற மகளிர் குணங்கள் நான்கனுள் ஒன்று.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

one of the four characteristic features of women, credulity, artlessness, softness, tenderness, delicacy, ignorance, folly

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மடம் என்பது கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை.
சொன்னவுடனே ஒன்றனைப் புரிந்துகொண்டு, அதனை விடாமல் பற்றிக்கொள்ளுதல்.

குன்ற குறவன் காதல் மட மகள்
வரை அர_மகளிர் புரையும் சாயலள் – ஐங் 255/1,2

குன்றத்துக் குறவனின் அன்புக்குரிய மடப்பம் பொருந்திய மகள்,
மலையிலிருக்கும் தெய்வ மகளிரைப் போன்ற சாயலையுடையவள்,

எள்ளல் நோனா பொருள் தரல் விருப்பொடு
நாணு தளை ஆக வைகி மாண் வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே – அகம் 29/20-23

(பிறர்) இகழ்வதைப் பொறுக்காத பொருளீட்டும் விருப்பத்துடன்
மான உணர்வு கட்டிப்போட்டதனால் தங்கி, மாண்புள்ள வினை காரணமாக
(என்)உடம்பு அங்கு இருந்ததே ஒழிய
பேதைமை உள்ள (என்) நெஞ்சம் உன் அருகிலேயேதான் இருந்தது.

பெரும் கவின் பெற்ற சிறு தலை நௌவி
மட கண் பிணையொடு மறுகுவன உகள – மது 275,276

பெரும் அழகைப் பெற்ற சிறிய தலையையுடைய நௌவிமான்
கபடமற்ற கண்ணையுடைய பிணையோடே சுழல்வனவாய் துள்ள,

மட நடை ஆமான் கயமுனி குழவி – மலை 500

மென்மையான நடையையுடைய காட்டுப்பசுவின் கன்றும், யானைக்கன்றும்,

மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்து உகு போர்_களத்து ஆடும் கோவே – பதி 56/6-8

அறியாமை மிகுதியால் பகைகொண்டு மேலேறி வந்த
வேந்தர்கள் தம் உடம்பை விட்டு மேலுலகத்துக்குச் சென்று வாழும்படி
இறந்து விழும் போர்க்களத்தில் ஆடுகின்ற அரசன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *