சொல் பொருள்
வெற்றிலையை வைக்கும் பெட்டி
சொல் பொருள் விளக்கம்
வெற்றிலைக்குச் சுருள் என்பது ஒருபெயர். மொய் தருவார் வெற்றிலையில் வைத்துப் பணம் தரும் வழக்கத்தால் அது சுருள் எனப்பட்டது. இனி, சுருள் என்பதுபோல் மடி என்பதொரு சொல்லும் வெற்றிலைக்கு உண்டு என்பது பரதவர் வழக்கால்
புலப்படுகின்றது. வெற்றிலையை வைக்கும் பெட்டியை மடிப்பெட்டி என்பர். மடித்து மெல்லுவது மடி, வலித்தல் பொருளிலும் மடியை அவர்கள் வழங்குதல் படகு வலித்தல் (ஓட்டுதல்) வழியதாகலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்