சொல் பொருள்
மட்டு – தனக்குரிய அளவு
மரியாதை – பெருமை
சொல் பொருள் விளக்கம்
சிலர் செருக்காகப் பேசும் போதோ, நடந்து கொள்ளும் போதோ ‘மட்டுமரியாதை’தெரியாதவன் என்பர். தனக்குரிய அளவும், பிறர்க்குத் தரத் வேண்டிய பெருமையளவும் தெரியாதவன் என்பதாம். ‘இனிப் பிறர் தகுதியளவும், பெருமையளவும் தெரியாதவன் என்பதுமாம்.
‘அந்த மட்டில் நில்’ என்பதில் மட்டு அளவுப் பொருளாதல் விளங்கும். மட்டிப்பு(limited) கழகங்கள் இந்நாளில் உள்ளன. வரையறுக்கப்பட்ட அளவினது என்பது பொருள்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்