சொல் பொருள்
(பெ) 1. ஒன்றுசேர்தல், கூடுதல், 2. எய்துதல்,
சொல் பொருள் விளக்கம்
ஒன்றுசேர்தல், கூடுதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the act of uniting, acquiring, attaining
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பகலும் நம்_வயின் அகலான் ஆகி பயின்று வரும்-மன்னே பனி நீர் சேர்ப்பன் இனியே மணப்பு அரும் காமம் தணப்ப நீந்தி வாராதோர் நமக்கு யாஅர் என்னாது மல்லல் மூதூர் மறையினை சென்று சொல்லின் எவனோ பாண – அகம் 50/5-10 பகலிலும் நம்மைவிட்டு அகலாதவனாகி, (முன்பெல்லாம்)அடிக்கடி வருவானே! குளிர்ந்த கடற்கரையையுடைய தலைவன்; இப்பொழுதோ, ஒன்றுசேர்வதற்கு அரிதாயிருந்த (பழைய)விருப்பம் நீங்கிவிட, (இப்பொழுது இருக்குமிடத்தைத்) துறந்து வராமலிருப்பவர் நமக்கு யார் என்று வாளாவிராமல், (இப்பொழுது தலைவன் இருக்கும் அந்த)வளமிக்க பழமையான ஊருக்கு மறைவாகச் சென்று (அவனிடம்) சொன்னால் என்ன பாணனே!, மணப்பு அரும் காமம் புணர்ந்தமை அறியார் – அகம் 112/15 எய்துதற்கு அரிய காமத்தால் நீர் கூடிய களவொழுக்கத்தினை அறியாத எமர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்