Skip to content

சொல் பொருள்

(வி) 1. கழுவப்படு, 2. திருநீராட்டப்படு, நீரூற்றிப் பூசிக்கப்படு, 3. கைசெய், அலங்கரிக்கப்படு,

சொல் பொருள் விளக்கம்

கழுவப்படு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be washed, made clean, bathe as an idol, get adorned, decorated

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பூசல் ஆயம் புகன்று இழி அருவியின்
மண்ணுறு மணியின் தோன்றும்
தண் நறும் துறுகல் ஓங்கிய மலையே – குறு 367/5-7

ஆரவாரத்தையுடைய மகளிர்கூட்டம் விரும்பி இறங்கும் அருவியினால்
 கழுவப்பட்ட நீலமணிபோல் தோன்றும்
 குளிர்ந்த நறிய குத்துப்பாறை உயர்ந்துள்ள மலையினை.

காண்குவெம் தில்ல அவள் கவின் பெறு சுடர் நுதல்
விண் உயர் அரண் பல வௌவிய
மண்ணுறு முரசின் வேந்து தொழில் விடினே – ஐங் 443/3-5

காண்பேனே, அவளின் அழகுபெற்ற ஒளிவிடும் நெற்றியை;
வானளாவிய அரண்கள் பலவற்றைக் கைப்பற்றிய,
கழுவிப்பூசிக்கப்பட்ட முரசையுடைய வேந்தன் தனது போரைக் கைவிட்டால்.

தெய்வவுத்தியொடு வலம்புரி வயின் வைத்து
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
மகர பகு வாய் தாழ மண்ணுறுத்து
துவர முடித்த துகள் அறும் முச்சி – திரு 23-26

தெய்வவுத்தி, வலம்புரி ஆகிய தலைக்கோலங்களை அதனதன் இடத்தில் வைத்து,
திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்
சுறாவின் அங்காந்த வாயாகப்பண்ணின தலைக்கோலம் நெற்றியில்தங்க அலங்கரிக்கப்பட்டு,
முற்ற முடித்த குற்றம் இல்லாத கொண்டையில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *