Skip to content

சொல் பொருள்

(பெ) 1. நிலம், நிலத்தின் மேற்பரப்பு, 2. நாடு,  3. உலகம், பூமி, 4. பூமியிலுள்ளோர், 5. மார்ச்சனை, மத்தள முதலியவற்றிற் பூசும் சாந்து,

சொல் பொருள் விளக்கம்

நிலம், நிலத்தின் மேற்பரப்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

soil, earth, country, earth, world, paste smeared on the head of a drum for toning it

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மண் திணி ஞாலம் விளங்க – நற் 153/2

செறிவான நிலத்தையுடைய இந்த உலகம் ஒளிர்ந்துவிளங்க

பைம் சாய் கொன்ற மண் படு மருப்பின்
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின் – பெரும் 209,210

பசிய கோரையை (அடியில்)குத்தி எடுத்த மண் படிந்த கொம்பினையுடைய
கரிய ஆனேறுகள் பொருத இடமகன்ற வயல்களில்,

தென் புல காவலர் மருமான் ஒன்னார்
மண் மாறு கொண்ட மாலை வெண்குடை – சிறு 63,64

தென்னாட்டின் காவலருடைய குடியிலுள்ளானும்; பகைவருடைய
நிலத்தை மாறுபாட்டால் கைக்கொண்ட, (முத்து)மாலை அணிந்த வெண்கொற்றக்குடையினையும்

குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண்
பொதுமை சுட்டிய மூவர் உலகமும் – புறம் 357/1,2

குன்றுகளோடு கூடிய மலைகளைத் தன்பாற் பிணித்துக்கட்டி நிற்கும் மண்ணுலகத்தில்
பொதுவெனக் கருதப்பட்ட மேவேந்தருடைய நாடு மூன்றையும்

மண் நாண புகழ் வேட்டு – புறம் 384/15

உலகத்திலுள்ளோர் கண்டு நாணும்படியாகப் புகழைச் செய்து

மண் அமை முழவின் பண் அமை சீறியாழ் – பொரு 109

மார்ச்சனை அமைந்த முழவினோடே பண் (நன்கு)அமைந்த சிறிய யாழையுடைய

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *