Skip to content

சொல் பொருள்

(பெ) 1. அறியாமை, மடம், 2. வனப்பு, அழகு, 3. செருக்கு,  4. மனவெழுச்சி,  5. மிகுதி, 6. வலிமை,

சொல் பொருள் விளக்கம்

அறியாமை, மடம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

ignorance, beauty, arrogance, enthusiasm, elation, abundance, excess, strength

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் – திரு 4

தன்னைச் சேர்ந்தாரின் தீவினையைப் போக்கி அவரைத் தாங்கிய அறியாமையை உடைத்தற்குக் காரணமாகிய
வலிமையுடைய தாள்

மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள் – சிறு 259

தன் கடுமையால் குதிரையின் செலவைப் பின்னே நிறுத்தும் வனப்புடைத்தாகிய வலியினையுடைய தாளினையும்

அகல் வயல்
அரிவனர் அரிந்தும் தருவனர் பெற்றும்
தண் சேறு தாஅய மதன் உடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் – நற் 8/5-8

அகன்ற வயலில்
கதிரறுப்போரால் அறுக்கப்பட்டு, அதனைக் கொண்டுவருவோரால் கொணரப்பெற்றும்
குளிர்ந்த சேறு பரவிய அழகுடைய வலிய தண்டினையுடைய
கண் போன்ற நெய்தல் பூ, நெற்போரில் பூத்திருக்கும்

மன்னர், மன் எயில் கதுவும் மதன் உடை நோன் தாள் – பட் 277,278

பகைமன்னரின், நிலைபெற்ற மதிலைக் கைப்பற்றும் செருக்கினையும், வலியினையுமுடைய தாளினையும்

மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள் – புறம் 75/6

அடுத்துப் பொரும் போரைப் பொறுக்கும் மனவெழுச்சியையுடைத்தாகிய வலிய முயற்சியையுடைய

மண்டு அமர் அட்ட மதன் உடை நோன் தாள் – புறம் 213/1

மடுத்தெழுந்த போரின்கண் பகைவரைக் கொன்ற மிகுதி பொருந்திய வலிய முயற்சியையுடைய

மதன் உடை முழவு தோள் ஓச்சி தண்ணென – புறம் 50/12

நினது வலியையுடைய முழவு போலும் தோளை எடுத்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *