சொல் பொருள்
(பெ) கழுத்தணியின் தொங்கல்
சொல் பொருள் விளக்கம்
கழுத்தணியின் தொங்கல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Large pendant suspended from the necklace
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திண் கதிர் மதாணி ஒண் குறு_மாக்களை – மது 461 திண்ணியதாய் ஒளிரும் பேரணிகலன்களையுடைய இயற்கையாகவே அழகுள்ள சிறுபிள்ளைகளை ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும் பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில நித்தில மதாணி அ தகு மதி மறு செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம் – பரி 2/29-32 ஓங்கி உயர்ந்த வானத்தில் தோன்றும் வளைந்த வானவில்லைப் போன்ற பலநிறப் பூணாகிய அணிகள் அகத்திடப்பட்ட, நிறைந்த அழகான முத்துக்களால் ஆன நித்தில மதாணி என்னும் அழகிய தகுதிபடைத்த மதியினோடு, அந்த மதியில் உள்ள களங்கம் போன்று சிவந்த நிறத்தவளான திருமகள் வீற்றிருக்கும் உன் மாசற்ற மார்பு;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்