Skip to content

சொல் பொருள்

(பெ) 1. போதையூட்டும் பானம், 2. தேன்,

சொல் பொருள் விளக்கம்

போதையூட்டும் பானம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Intoxicating drink, honey

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் – பட் 108

(மிதமான கிளர்ச்சியைத் தரும்)கள்ளைத் தவிர்த்து (வெறியூட்டும்)மது (உண்டு) மகிழ்ந்தும்,

விரி மலர் மதுவின் மரன் நனை குன்றத்து – பரி 17/5

மலர்ந்த பூக்களினின்றும் ஒழுகும் தேனினால் மரங்கள் நனைந்துபோகும் திருப்பரங்குன்றத்தில்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.