சொல் பொருள்
(பெ) மனம்
சொல் பொருள் விளக்கம்
மனம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mind
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொருந்தி யான் தான் வேட்ட பொருள்_வயின் நினைந்த சொல் திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய மருந்து போல் மருந்து ஆகி மனன் உவப்ப பெரும் பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே – கலி 17/18-21 பொருத்தமாக, நான் அவன் விரும்பிய செயல் ஆர்வத்தினால் விளையும் கேடுகளை நினைந்து கூறிய சொற்கள், சீர்படுத்தும் நிலையிலுள்ள உடம்பிற்கு மருத்துவன் ஊட்டிய மருந்தினைப் போல் நல்ல மருந்தாக வேலைசெய்ய, உன் மனம் களிக்கும்படி, பெரும் புகழ் கொண்ட நம் தலைவன் கைவிட்டுவிட்டான் தன் பயணத்தை.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்