சொல் பொருள்
(பெ) முறைமை, நியதி, மரபு உள்ளவை,
சொல் பொருள் விளக்கம்
முறைமை, நியதி, மரபு உள்ளவை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
that which is in established usage or order
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே – திரு 94-96 ஒரு முகம் மந்திர நியதிகளின் மரபுள்ளவற்றில் வழுவாத அந்தணருடைய வேள்விகளை கூர்ந்து கேட்கும்; குரவை தழீஇ யாம் மரபுளி பாடி தேயா விழு புகழ் தெய்வம் பரவுதும் – கலி 103/75,76 குரவைக் கூத்தில் தழுவிக்கொண்டு நாம் எமது மரபுப்படி பாடி, குன்றாத சிறப்பின் புகழையுடைய தெய்வத்தைப் போற்றுவோம்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்