சொல் பொருள்

(பெ) 1. விருட்சம்,  2. மரக்கலம்,  3. மரக்கட்டை, 4. வில், 

சொல் பொருள் விளக்கம்

விருட்சம், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

tree, Ship or boat;, wood, timber, bow

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பழு மரம் தேரும் பறவை போல – பெரும் 20

பழுத்த மரத்தைத் தேடித்திரியும் பறவைகளைப் போல,

பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை
பெரு நீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு – பெரும் 431-433

பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின்
பெரிய நீரைக் கடந்துபோகும் மனக்கலக்கமுள்ள மாக்கள்
ஒரேயொரு தோணி வரும் காலத்திற்காகக் காத்திருத்தலைப் போல

பெரும் கடல் நீந்திய மரம் வலி_உறுக்கும்
பண்ணிய விலைஞர் போல புண் ஒரீஇ – பதி 76/4,5

பெரிய கடலில் சென்றுவந்த மரக்கலத்தினைப் பழுதுநீக்கி மீண்டும் வலிமைப்படுத்தும்
பொருள்கள் விற்கும் கடல்வாணிகர் போலப் போரில் ஏற்பட்ட புண்களை ஆற்றி,

அகல் இலை முருக்கின்
பெரு மர கம்பம் போல
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே – புறம் 169/10-12

அகன்ற இலையையுடைய முருக்கினது
பெரிய மரக்கட்டையாற் செய்யப்பட்ட தூணமாகிய இலக்கைப் போல
பொருவார்க்குத் தொலையாத நினது வென்றி வாழ்வதாக

சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால் – கலி 43/3

சந்தன மரத்தின் கட்டையால் செய்யப்பட்ட உலக்கைகளால்

வார் கோல்
கொடு மர மறவர் பெரும – புறம் 43/10,11

நீண்ட அம்பினையும்
வளைந்த வில்லினையும் உடைய மறவர்க்குத் தலைவனே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *