சொல் பொருள்
(பெ) 1. காதல் மயக்கம், 2. நறுமணம்,
சொல் பொருள் விளக்கம்
காதல் மயக்கம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sexual desire, fragrance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க – கலி 27/17,18 கருமையான அழகிய மலர் போன்ற மைதீட்டிய என் கண்களில் மயக்கத்தை ஊட்டி, அவை மகிழும்படி கூறிய பொய் மொழிகளால் நெஞ்சைப் பறிகொடுத்த நம்மைத்தான் அவர் மறந்துவிட்டுப்போகட்டும், துயில் இன்றி யாம் நீந்த தொழுவை அம் புனல் ஆடி மயில் இயலார் மரு உண்டு மறந்து அமைகுவான்-மன்னோ – கலி 30/5,6 துயில் இன்றி நான் இரவைக் கழிக்க, நீர்நிலைகளில் இனிமையாக நீர்விளையாட்டு ஆடி மயிலின் தன்மையுள்ள பரத்தையரின் நறுமணத்தை நுகர்ந்துகொண்டு நம்மை மறந்திருப்பாரோ –
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்