Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மருவியோர் – தன்னைச் சேர்ந்தவர், 2. மருவியோர் – தன்னைத் தழுவியவர், 3. மருவியோர் – பொருந்தியோர், 4. மருவியோர் – வழக்கமாகக் கொண்டவர், மேற்கொள்பவர், 

சொல் பொருள் விளக்கம்

மருவியோர் 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

people who belong to one, one who embraced, one who had a close contact with, one who is accustomed to

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

களிறே,
—————————– ————————– ——–
மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றே – புறம் 13/5-8

யானை
———————– ——————– ——————–
பாகனின் கட்டுக்கு அடங்காமல் அது வெறி கொண்டு உள்ளது.

சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே – குறு 102/4

சான்றோர் அல்லர் நான் தழுவியவர்

தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே – அகம் 231/15

பூவிதழ் பொருந்திய கூந்தற்கண்ணே பொருந்தித் துயின்றோராய அவர்

பலரோடு உண்டல் மரீஇயோனே – புறம் 234/6

பலரோடுங்கூடி உண்டலை மேற்கொண்டோன்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *