சொல் பொருள்

(பெ) 1. விலங்கின் கொம்பு, 2. யானையின் தந்தம், 3. யாழின் ஓர் உறுப்பு,

சொல் பொருள் விளக்கம்

விலங்கின் கொம்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

horn of a beast, tusk of an elephant, a part of a lute

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் – பெரும் 110

வளைந்த கொம்பினையுடைய காட்டுப்பன்றியின் வரவைப் பார்த்து நிற்கும்

வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் – ஐங் 265/2

வளைந்த வெண்மையான கொம்பினையுடைய ஆண்பன்றி காத்துவளர்க்கும்

திரி மருப்பு இரலையொடு மட மான் உகள – முல் 99

முறுக்குண்ட கொம்பினையுடைய புல்வாய்க்கலையோடே மடப்பத்தையுடைய மான் துள்ள,

தட மருப்பு எருமை மட நடை குழவி – நற் 120/1

அகலமான கொம்புகளையுடைய எருமைகளின் இள நடையினைக் கொண்ட கன்றுகள்

சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய – நற் 131/5

சுறாமீனின் கொம்பு போன்ற முள்ளைக் கொண்ட இலைகள் முறிய

தகர் மருப்பு ஏய்ப்ப சுற்றுபு சுரிந்த – அகம் 101/4

செம்மறியாட்டுக் கிடாயின் கொம்பினை ஒப்பச் சுற்றிக் கடை சுருண்ட

கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு – குறு 363/1

கண்ணி போல் வளைந்த கொம்பினையுடைய தலைமைப் பண்புள்ள நல்ல காளை,

பெரும் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் – அகம் 109/13

பெரிய களிற்றின் கொம்பொடு புலியின் வரி பொருந்திய தோலைத் தண்டமாகத் தான் ஏவலரை இறுக்கச்செய்யும்

பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின்
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும் – பொரு 13,14

பாம்பு தலையெடுத்தாற் போன்ற ஓங்கிய கரிய தண்டினையும்; கருநிறப்பெண்ணின் முன்கையில் (அணியப்பட்ட)அழகிய வளையலை ஒத்ததும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.