சொல் பொருள்
(பெ) 1. மறு பிறவி, 2. மறு உலகம், சுவர்க்கம்,
சொல் பொருள் விளக்கம்
மறு பிறவி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
next birth
the next world, heaven
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இம்மை மாறி மறுமை ஆயினும் நீ ஆகியர் எம் கணவனை – குறு 49/3,4 இப் பிறவி போய் இனி எத்தனை பிறவியெடுத்தாலும் நீயே என் கணவனாக இருக்கவேண்டும் இம்மை உலகத்து இசையொடும் விளங்கி மறுமை உலகமும் மறு இன்று எய்துப – அகம் 66/1,2 இவ்வுலகத்தே புகழொடும் விளக்கமுற்று மேல் உலக வாழ்வினையும் குற்றமின்றி எய்துவர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்