சொல் பொருள்

(பெ) 1. மறு பிறவி,  2. மறு உலகம், சுவர்க்கம்,

சொல் பொருள் விளக்கம்

மறு பிறவி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

next birth

the next world, heaven

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் எம் கணவனை – குறு 49/3,4

இப் பிறவி போய் இனி எத்தனை பிறவியெடுத்தாலும்
நீயே என் கணவனாக இருக்கவேண்டும்

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப – அகம் 66/1,2

இவ்வுலகத்தே புகழொடும் விளக்கமுற்று
மேல் உலக வாழ்வினையும் குற்றமின்றி எய்துவர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.