Skip to content

சொல் பொருள்

(வி) 1. மிகு, அதிகமாகு, 2. நிறை, ததும்பு,

சொல் பொருள் விளக்கம்

மிகு, அதிகமாகு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

increase, abound, be filled up, well up

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கணை கால் மா மலர் கரப்ப மல்கு கழி
துணை சுறா வழங்கலும் வழங்கும் – நற் 67/6,7

திரண்ட தண்டினையுடைய கரிய மலர்கள் மறைந்துபோகும்படி நீர் பெருகும் கழிகளில்
துணையோடு சுறாமீன்கள் நீந்தவும் செய்யும்

மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுர முதல் – குறு 347/1

நீர் ததும்பும் சுனைகள் வற்றிப்போன வறண்ட பாலை நிலத்தின் தொடக்கத்தில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.