Skip to content

சொல் பொருள்

(பெ) 1. இளமை, 2. குழந்தைப்பருவம், 

சொல் பொருள் விளக்கம்

இளமை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

youth, tender age, infancy

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குருதி வேட்கை உரு கெழு வய_மான்
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் – நற் 192/1,2

இரத்த வெறிகொண்ட அச்சம் பொருந்திய வலிய புலியானது
வலிமை மிகுந்த ஆற்றலுடைய இளமையான களிற்றினை எதிர்பார்த்திருக்கும்

மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர் – பரி 11/88,89

மையோலையைக் கையில் பிடித்து சுவடி தூக்கி ஆடும் இளம் சிறுவரின் ஆட்டத்திற்கு மாறாக எழுந்து,
பொய்யாக ஆட்டத்தை ஆடுகின்ற தோழியரைக் கொண்ட அந்தக் கன்னி மகளிர்,

கிழவர் கிழவியர் என்னாது ஏழ்_காறும்
மழ ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும் – பரி 11/120,121

கிழவர், கிழவியர் என்று சொல்லப்படாமல், எமது ஏழாம் பருவத்தினை யாம் அடையும்வரைக்கும்
இளமையைத் தந்து யாம் செல்வத்தோடும் சுற்றத்தோடும் நிலைபெறவேண்டும் என்போரும்

மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே – கலி 108/21

பொருந்தாத சொற்களைச் சொல்லிக் குழந்தைப் பருவத்து அறியாமையைக் காட்டுகிறது உன் செயல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *