சொல் பொருள்
(வி.மு) பார்க்க : மான்
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : மான்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேங்கையும் புலி ஈன்றன அருவியும் தேம் படு நெடு வரை மணியின் மானும் – நற் 389/1,2 வேங்கை மரங்களும் புலிபோல் தோன்றும் பூக்களை விளைவித்தன; அருவிகளும் தேன் மணம் மிகுந்த நெடிய மலையில் நீலமணி போலத் தோன்றுகின்றன – புலியூர்க் கேசிகன் உரை மணியின் – இன் உருபு ஒப்புப் பொருளது – வைதேகி ஹெர்பெர்ட் உரை பாசடை நிவந்த கணை கால் நெய்தல் இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும் கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் – குறு 9/4-6 பசிய இலைகளுக்கு மேல் உயர்ந்த திரண்ட காம்பையுடைய நெய்தல்பூ கூட்டமான மீன்களையுடைய கரிய கழியில், நீரோட்டம் மிகுந்தோறும் குளத்தில் மூழ்கும் மகளிரின் கண்களை ஒக்கும் – உ.வே.சா உரை 6. கண்ணின் – இன் என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு உவம உருபோடு வந்தது (தொல்.உவம.11.பேர்); மான என்பது வினை, உவமத்தின் கண் வந்தது (தொல்.உவம.12.பேர்) – உ.வே.சா உரை விளக்கம் புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து பனி ஊர் அழல்கொடி கடுப்ப தோன்றும் இமய செம் வரை மானும்-கொல்லோ – அகம் 265/1-3 புகை போலப் பொலிவுற்று அகன்ற வானில் உயர்ந்து பனி தவழும் தீச்சுடரை ஒப்பத் தோன்றும் இமயமாய செவ்விய மலையினை ஒக்குமோ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்