சொல் பொருள்
(பெ..எ) மால் என்ற வினையின் அடியாக எழுந்தது. மயங்கிய, விரவிய, கலந்த,
சொல் பொருள் விளக்கம்
மயங்கிய, விரவிய, கலந்த,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mix, mingle, bled
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஞான்ற ஞாயிறு குட மலை மறைய மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் – நற் 239/1,2 மேற்றிசையில் சாய்ந்த ஞாயிறு மேலை மலையில் மறையவும் இருள் மயங்கிய மாலைப்போதில் கள்குடித்து மகிழ்ந்த பரதவர்கள் ஞான்ற, மான்ற என்பன ஞால், மால் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த தெரிநிலைப் பெயரெச்ச வினை இருள் விரவிய அந்திமாலை மான்ற மாலை எனப்பட்டது. – ஔவை.சு.து.உரை/உரை விளக்கம் மாலை மான்ற மணல் மலி வியல் நகர் – நற் 361/6 மாலையொளி மயங்கிய மணல் பரந்த அகன்ற மனைக்கு மான்ற : மால் என்பதல் அடியாகப் பிறந்த பெயரெச்ச வினை – ஔவை.சு.து.உரை/உரை விளக்கம் சான்றீர் உமக்கு ஒன்று அறிவுறுப்பேன் மான்ற துளி இடை மின்னு போல் தோன்றி ஒருத்தி ஒளியோடு உரு என்னை காட்டி அளியள் என் நெஞ்சு ஆறு கொண்டாள் அதன் கொண்டும் துஞ்சேன் – கலி 139/4-7 சன்றோர்களே! உங்களுக்கு ஒன்றனை எடுத்துச் சொல்வேன்! மயங்கவைக்கும் மழையிடையே வரும் மின்னலைப் போல் தோன்றி, ஒருத்தி தன் ஒப்பனையுடன் தன் உருவத்தையும் எனக்குக் காட்டுமளவுக்கு என்மேல் கருணைகொண்டாள், என் நெஞ்சத்தை வழியாகக் கொண்டு என்னுள் வந்துவிட்டாள், அது முதல் துயில்கொள்ளேன்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்