சொல் பொருள்
(வி) அணி. சூடு,
சொல் பொருள் விளக்கம்
அணி. சூடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wear, put on
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மெல் இணர் கண்ணி மிலைந்த மைந்தர் – புறம் 24/8 மெல்லிய பூங்கொத்தாற் செய்யப்பட்ட தலைமாலையைச் சூடிய ஆடவர் தண் நறும் தொடையல் வெண் போழ் கண்ணி நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி – குறி 115-116 தண்ணிய நறிய மலர்ச்சரங்களையும், வெண்மையான தாழைமடல் தலைமாலையினையும், அழகு பெற்ற தலையில், (முருகனோ என்று)அச்சமுறும்படி சூடி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்