Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மென்மையான/இனிமையான பேச்சு, 2. மிழலைக்கூற்றம், சோழநாட்டின் ஒரு பகுதி,

சொல் பொருள் விளக்கம்

மென்மையான/இனிமையான பேச்சு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

soft/sweet talking, a section of the chozha country

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மழலை அம் குறுமகள் மிழலை அம் தீம் குரல் – நற் 209/5

மழலைச் சொல் கொண்ட அழகிய இளமகளின் மென்மையான பேச்சான இனிய குரலை

ஓம்பா ஈகை மா வேள் எவ்வி
புனல் அம் புதவின் மிழலையொடு – புறம் 24/18,19

பொருளைப் பாதுகாவாத வண்மையையுடைய பெரிய வேளாகிய எவ்வியது
நீர் வழங்கும் வாய்த்தலைகளையுடைய மிழலைக்கூற்றத்துடனே

மிழலைக்கூற்றம் அல்லது மிழலைநாடென்பது சோழ நாட்டின் கடற்கரைப் பகுதியாம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *