சொல் பொருள்
(பெ) ஒரு நீர்வாழ் உயிரினம், நாள்மீன், கோள்மீன் ஆகிய ஒரு விண் பொருள்
சொல் பொருள் விளக்கம்
ஒரு நீர்வாழ் உயிரினம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fish, a celestial object like a star or planet
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மீன் ஆர் குருகின் மென் பறை தொழுதி – அகம் 40/3 மீனை உண்ணும் கொக்குகளின் குறும்பறப்புக் கூட்டம் பல் மீன் நாப்பண் திங்கள் போல – பதி 90/17 பல விண்மீன்களின் நடுவே விளங்கும் திங்களைப் போல நாள்_மீன் விராய கோள்_மீன் போல – பட் 68 (அன்றைய)நாளுக்குரிய விண்மீனுடன் கலந்த கோள்களாகிய மீன்கள் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்