Skip to content
மீமிசை

மீமிசை என்பதன் பொருள்மேலே, மிசை, மீது, உச்சியில், உயர்ந்த இடத்தில், மலை உச்சி,ஒருபொருட் பன்மொழி

1. சொல் பொருள் விளக்கம்

1. (வி.அ) 1. மேலே, மிசை, மீது, 2. உச்சியில், உயர்ந்த இடத்தில், மலை உச்சி

2. (வி.அ.இ.சொ) மேலாக, மீதாக

3. ஒருபொருட் பன்மொழி என்பது நன்னூல் வழங்கும் ஒரு தமிழ் இலக்கணக் குறியீடு. இதனை மீமிசை எனவும் குறிப்பிடுவர்.

மீமிசை ஞாயிறு, புனிற்றிளங் கன்று, உயர்ந்தோங்கு பெருவரை, குழிந்து ஆழ்ந்த கண் என்பன இதற்கு எடுத்துக்காட்டுகள்

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

above, peak, pinnacle, over, on the top, on very high altitude, on, over

That which exceeds or abounds

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை – திரு 114

கீழ்நோக்கி நழுவி வீழும் தொடி என்ற அணிகலனோடு மேலே சுழல ஒரு கை

ஆசினி முது சுளை கலாவ மீமிசை
நாக நறு மலர் உதிர – திரு 301,302

ஆசினிகளுடைய முற்றிய சுளை தன்னிடத்தே கலக்க, (மலையின்)உச்சியில்
சுரபுன்னையின் நறிய மலர்கள் உதிர,

பிறங்கு மலை
மீமிசை கடவுள் வாழ்த்தி கைதொழுது – குறி 208,209

பெரிய மலையின் உயர்ந்த இடத்தே உறைகின்ற இறையாகிய முருகனை வாழ்த்தி

பவ்வ மீமிசை பகல் கதிர் பரப்பி – பொரு 135

கடலின் மீதே பகலைச் செய்யும் தன் கதிர்களைப் பரப்பி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *