சொல் பொருள்
பெ) 1. கூற்றம், யமன், 2. தலைமை, சிறப்பு, 3. தலைவன், 4. திண்மை, உறுதி, 5. வலிமை, 6. மறம், வீரம்,
சொல் பொருள் விளக்கம்
கூற்றம், யமன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
God of death, distinction, superiority, greatness, chief, Lord, Master, hardness, firmness, strength, courage, valour
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆளி நன் மான் அணங்கு உடை குருளை மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி – பொரு 139,140 ஆளியாகிய நல்ல மானினது வருத்துதலையுடைய குருளை கூற்றுவனுடைய வலியிற்காட்டில் மிகுகின்ற வலியாலே கலித்து – நச் உரை ஆளியாகிய நல்ல மானினது வருத்துதலையுடைய குருளையினது தலைமை சான்ற மிக்க வலிமை போன்ற வலிமையுடைமையாலே செருக்குக்கொண்டு – பொ.வே.சோ. உரை சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து குரும்பையின் முலை பட்ட பூ நீர் துடையாள் பெருந்தகை மீளி வருவானை கண்டே இரும் துகில் தானையின் ஒற்றி – பரி 16/20-23 பீச்சாங்குழலைக் கொண்ட தோழியர் சுற்றிலும் வளைத்துக்கொண்டு ஒரு பரத்தையின் மீது சாய நீரைப் பாய்ச்ச, அதனால், சிறிய இளநீரைப் போன்ற முலைகளில் பட்ட அந்தச் சாயநீரைத் துடைக்காமலிருந்தவள், பெருந்தகையான தலைவன் வருவதனைக் கண்டு, நீண்ட துகிலின் முந்தானையால் நீத்துளிகளை ஒற்றியெடுக்க, அரும் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப தாள் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள் – அகம் 373/5-9 அரிய சுரத்தைக் கடந்துவந்த வருத்தத்தால் செயலிழந்தவராக பெரிய புற்கென்ற மாலைக்காலத்தே தனிமைத்துயரமும் வந்தடைய திண்மையுடைய நம் உள்ளம் மேற்கொண்டு செல்லுதலை வலியுறுத்த முழந்தாள்களைக் கையாற் பூட்டிய தனித்த நிலையினதாகிய இருப்புடன் தனது நிலையினையே எண்ணியிருக்கும் நம் காதலி நம்முடைய இந்த நிலையினை உணரவேமாட்டாள் நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து ஆள்வினைக்கு எதிரிய மீளி நெஞ்சே – அகம் 379/3,4 மிக்க வன்மையுடன் பொருளை விரும்பி அதுபற்றி முயலுதற்கு முற்பட்ட வலிய நெஞ்சமே மீளி முன்பின் ஆளி போல – புறம் 207/8 மறம் பொருந்திய வலியையுடைய யாளியை ஒப்ப
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்