சொல் பொருள்
தலை உச்சி, உச்சிக்கொண்டை, மயில் கோழி முதலியவற்றின் உச்சிக்கொண்டை, சூட்டு,
சொல் பொருள் விளக்கம்
தலை உச்சி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
crown of head, Tuft of hair on the head, Peacock’s crest, cock’s comb
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வலஞ்சுழி உந்திய திணை பிரி புதல்வர் கயம் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ – பரி 16/7,8 வலமாகச் சுழித்துக்கொண்டு வரும் சுழியினால் உந்தப்பட்டுவர, வீட்டைவிட்டுத் தனியே வந்து நீராடும் சிறுவரின் மெல்லிய தலையுச்சியில் இருக்கும் முஞ்சம் என்னும் அணிகலனோடு அவை சேர்ந்துகொள்ள, துவர முடித்த துகள் அறும் முச்சி பெரும் தண் சண்பகம் செரீஇ – திரு 26,27 முற்ற முடித்த குற்றம் இல்லாத கொண்டையில் பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் செருகி, வாகை ஒண் பூ புரையும் முச்சிய தோகை ஆர் குரல் – பரி 14/7,8 வாகையின் ஒளிரும் பூவினைப் போன்ற கொண்டையைக் கொண்ட மயில்களின் நிறைந்த அகவல் குரல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்