Skip to content
வாகை

வாகை என்பதன் பொருள்ஒரு மரம்.

1. சொல் பொருள்

(பெ) 1. ஒரு மரம், காட்டுவாகை, கருவாகை, பண்ணி வாகை, தூங்குமூஞ்சி மரம்  2. அகத்தி,  3. சங்ககாலப் போர்க்களங்களில் ஒன்று,  4. எயினன் என்ற மன்னனின் நகரம்

2. சொல் பொருள் விளக்கம்

ஒரு மரம், காட்டுவாகை,

சங்க காலத்தில், போரில் வெற்றியடைந்தவர்கள் இதன் பூவைச் சூடிக்கொள்வர். இன்றைக்கும் ஏதேனும்
வெற்றி அடைந்தவர்களை வாகைசூடினார் என்று கூறுவது வழக்கம்.

பண்ணி வாகை மரம் மற்ற மரங்களை போல் இல்லாமல் இரவிலும் ஆக்ஸிஜனை வெளியிடும்.

வாகை
வாகை

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Albizia lebbeck, Albizia saman, enterolobium saman, Sesbania grandiflora, a battlefield during sangamperiod, a city

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பண்ணி வாகை
பண்ணி வாகை
வாகை-தானே பாலையது புறனே - பொருள். புறத்:18/1
வாகை மரத்து நெற்றுக்களில் உள்ள விதைகள் காற்றடிக்கும்போது அசைந்து ஒலியெழுப்பும்.

ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும் – குறு 7/3-5

ஆரியக் கூத்தர்
கயிற்றில் ஆடும்போது ஒலிக்கும் பறையினைப்போல், காற்று மோதுவதால் கலங்கி
வாகைமரத்தின் வெண் நெற்று ஒலிக்கின்ற

அத்த வாகை அமலை வால் நெற்று
அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்ப – குறு 369/1,2

அரிய வழியில் உள்ள வாகையின் ஒலியெழுப்பும் வெண்மையான நெற்று
உள்ளீடான பரல்கள் நிறைந்த சிலம்பு போன்று அதன் விதைகள் ஒலிக்க

வாகையின் பூ ஆண் மயிலின் தலைக்குடுமி போல் இருக்கும்.

குமரி வாகை கோல் உடை நறு வீ
மட மா தோகை குடுமியின் தோன்றும் – குறு 347/2,3

இளம் வாகைமரத்தின் காம்புடைய நறிய பூக்கள்
மடப்பத்தையுடைய பெரிய ஆண்மயிலின் உச்சிக்குடுமியைப் போல் தோன்றும்
காடாகிய நீண்ட வெளியில் தானும் நம்மோடு

வாகை ஒண் பூ புரையும் முச்சிய
தோகை ஆர் குரல் – பரி 14/7,8

வாகையின் ஒளிரும் பூவினைப் போன்ற கொண்டையைக் கொண்ட
மயில்களின் நிறைந்த அகவல் குரல்

வாகைப்பூ பஞ்சுபோல் மென்மையாக இருக்கும், அதன் இலைகள் இரண்டிரண்டாகப் பிரிந்திருக்கும்.

மென் பூ வாகை புன் புற கவட்டு இலை – அகம் 136/10

மெல்லிய பூவையுடைய வாகையின் புல்லிய புறத்தினையுடைய கவர்த்த இலை

துய் வீ வாகை – பதி 43/23

மேலே பஞ்சு போன்ற முடியினைக் கொண்ட வாகைப்பூ

நன்னன் என்ற மன்னனின் காவல்மரமாக இருந்தது இந்த வாகை மரம்.

பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன்
சுடர் வீ வாகை கடி முதல் தடிந்த – பதி 40/14,15

பொன்னால் செய்த அழகிய தலைமாலை அணிந்த, பொன்னாலான தேரினைக் கொண்ட நன்னனின்
ஒளிவிடும் பூக்களையுடைய வாகையாகிய காவல்மரத்தை அடியோடு வெட்டிச் சாய்த்த

வாகையின் ஒரு வகையான அகத்திப்பூவின் மொட்டு,காட்டுப்பன்றியின் கொம்புபோல் இருக்கும்

புகழா வாகை பூவின் அன்ன
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் – பெரும் 109,110

புகழாத வாகையாகிய அகத்திப் பூவினை ஒத்த, (புகழ் வாகை – வெற்றி வாகை – வாகைத் திணை)
வளைந்த கொம்பினையுடைய பன்றியின் வரவைப் பார்த்து நிற்கும்

மயங்கு மலர் கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாள் தவ சிலவே அலரே
கூகை கோழி வாகை பறந்தலை
பசும் பூண் பாண்டியன் வினை வல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை
ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 393

கலந்து கோத்த மலர்களையுடைய மாலை குழைந்துபோகும்படியாக, தலைவன்
தழுவிய நாட்கள் மிகச் சிலவே; அதனால் எழுந்த பழிச்சொல்லோ,
கோட்டான்களாகிய கோழிகளையுடைய வாகை என்னும் போர்க்களத்தில்
பசும்பூண் பாண்டியனின் செயல்திறம் மிக்க அதிகன் என்பான்
தன் யானையோடு இறந்தபோது
ஒளிறும் வாள்களையுடைய கொங்கர் எழுப்பிய கூச்சலினும் பெரியது

வண் கை எயினன் வாகை அன்ன – புறம் 351/6

வள்ளன்மையுடைய எயினன் என்பானுக்குரிய வாகை என்னும் நகரத்தைப் போன்ற

புகழா வாகை பூவின் அன்ன - பெரும் 109

வடவனம் வாகை வான் பூ குடசம் - குறி 67

வாகை வெண் நெற்று ஒலிக்கும் - குறு 7/5

குமரி வாகை கோல் உடை நறு வீ - குறு 347/2

அத்த வாகை அமலை வால் நெற்று - குறு 369/1

கூகை கோழி வாகை பறந்தலை - குறு 393/3

சுடர் வீ வாகை கடி முதல் தடிந்த - பதி 40/15

துய் வீ வாகை நுண் கொடி உழிஞை - பதி 43/23

கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப - பதி 66/15

சுடர் வீ வாகை நன்னன் தேய்த்து - பதி 88/10

வாகை ஒண் பூ புரையும் முச்சிய - பரி 14/7

சூடா வாகை பறந்தலை ஆடு பெற - அகம் 125/19

மென் பூ வாகை புன் புற கவட்டு இலை - அகம் 136/10

இரும் பொன் வாகை பெருந்துறை செருவில் - அகம் 199/19

வண் கை எயினன் வாகை அன்ன - புறம் 351/6

காரைகள் கூகை முல்லை கள வாகை ஈகை படர் தொடரி கள்ளி கவினி - தேவா-சம்:2377/1

வாகை நுண் துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே - தேவா-சம்:2486/4

வாகை கொண்டார் என மயில் ஒடுங்கலால் - தேம்பா:1 49/2

அளிப்பட வந்த ஏவல் உணர் அளி பட விண்ட வாகை வளன் - தேம்பா:5 129/1

மாலை மது வாகை வளன் நூலை அறை நூழை உரை - தேம்பா:5 153/3

தேன் வழங்கும் பூம் துறை ஆம் செழு வாகை ஏந்து தவன் - தேம்பா:6 2/1

தெண் படு மது பூ வாகை சேர்த்த நல் துணைவனோடு - தேம்பா:7 2/2

பெறுவுகின்ற நாம வாகை பெருகுகின்ற வேலினான் - தேம்பா:7 32/1

தேன் வளர் வாகை விண்ட செழு மலர் வாடாது ஓங்க - தேம்பா:7 67/2

மன்றலும் பிழியும் பெய் வாகை சூசை-கண் - தேம்பா:7 97/2

அண்ட வாகை வளற்கு அவள் சூட்டினாள் - தேம்பா:10 37/4

ஓம்பி அம் கிளர் வாகை ஒண் குடை ஊச நல் நிழல் நீடினான் - தேம்பா:10 133/4

மந்திர மேல் தூய் ஒளி கால் வாகை என அங்கண் உடு வதிந்து நிற்ப - தேம்பா:11 110/1

வாகை மிக்கு ஒளி எனக்கு ஆக மற்று நாள் - தேம்பா:16 27/1

தேன் பயில் மலர் வாகை திருமறை அறையோனும் - தேம்பா:19 2/2

நனை அளாவிய வாகை நறும் தவன் - தேம்பா:26 155/2

வானகம் மிளிர் மீன் வாகை மணி முகில் ஊர்தி கொண்டு - தேம்பா:30 37/3

கான் பொதுளும் மலர் வாகை கண்டு உண்ட நயம் பெருகி - தேம்பா:34 36/2

மனத்து உறை காதலே வாகை கொண்டதே - பால:19 61/4

நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய வாகை
  சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே - பால-மிகை:0 40/3,4

சான்றோர் புகழும் தனி தாதையை வாகை கொண்டோ - அயோ:4 134/3

வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீ கொள - அயோ:11 106/3

வேதனை கொடுத்தன வாகை வேய்ந்தன - ஆரண்:7 36/4

கொண்டனென் வாகை என்று படைஞரை குறித்து சொன்னான் - ஆரண்:7 66/4

வாகை என்று ஒரு பொருள் வழுவல்-பாலதோ - கிட்:10 99/4

வாகை வெம் சிலை கை வீர மலர் குழல் புலர்த்த மாலை - யுத்1:10 20/1

வேய்ந்தது வாகை வீரற்கு இளையவன் வரி வில் வெம்பி - யுத்2:15 155/3

மூடினார் மூடினாரை முறைமுறை துணித்து வாகை
  சூடினான் இராமன் பாதம் சூடிய தோன்றல் தம்பி - யுத்2:19 92/3,4

ஆரியன் வாகை வில்லும் அச்சு உடை தேரும் அ தேர் - யுத்2:19 172/3

கொலை அமர் எடுத்து வாகை குரங்குகள் மலைந்த அம்மா - யுத்2-மிகை:16 23/4

சூடலை துறு மலர் வாகை என தொழுதனன் அவ்வளவில் அழகனும் அ - யுத்3:28 21/2

வாகை நாள் மலர் என்னும் மற்று ஓர் தலை - யுத்3:29 20/4

வாரணத்தினை நிறுத்தியே சூடினர் வாகை - யுத்3:30 21/4

புனைந்தனென் வாகை என்னா இந்திரன் உவகை பூத்தான் - யுத்3:31 227/2

மண்டி மூடி வாழ் அரக்கர்-தாமும் வாகை வீரன் மேல் - யுத்3-மிகை:31 15/2

மலக்கம் உண்டாகின் ஆக வாகை என் வயத்தது என்றான் - யுத்4:34 17/4

வாகை மாலையும் மருங்கு உற வரி வண்டொடு அளவி - யுத்4:35 16/3

வாகை கொண்ட வெம் சிலையின் வளைவுற வாங்கி - யுத்4-மிகை:41 33/2

வாகை வன மாலை சூடி அரசு உறையும் - முத்தொள்:105/1

மால் அமர் பெரும் சினை வாகை மன்றமும் - மணி:6/83

வாகை வேலோன் வளைவணன் தேவி - மணி:24/55

பார்ப்பன வாகை சூடி ஏற்புற - மது:23/72

வாகை தும்பை மணி தோட்டு போந்தையோடு - வஞ்சி:26/70

தலை தார் வாகை தம் முடிக்கு அணிந்தோர் - வஞ்சி:27/36

வருக தாம் என வாகை பொலம் தோடு - வஞ்சி:27/43

வாகை தும்பை வட திசை சூடிய - வஞ்சி:27/221

மாலை வெண்குடை கீழ் வாகை சென்னியன் - வஞ்சி:27/253

வாகை கண்ணி வலத்தில் சூட்டி - உஞ்ஞை:37/261

அறுகை புல்லினும் வாகை தளிரினும் - இலாவாண:5/69

திரு கொடி சாலி செம்பொன் வாகை என்று - இலாவாண:5/87

வாகை வேந்தன் மதித்தனன் ஆகி - வத்தவ:13/48

ஆகியது உணரும் வாகை வேந்தன் - வத்தவ:14/57

வற்றல் வாகை வறந்த கூகை மடிந்த தேறு பொடிந்த வேல் - கலிங்:78/1

உபய பலமும் விடாது வெம் சமம் உடலு பொழுதினில் வாகை முன் கொள - கலிங்:444/1

மான சரத்தால் கொலைசெய்தனன் வாகை வில்லான் - வில்லி:2 46/4

வெம் குனி வரி வில் வாகை விசயனும் பிறந்தான் வென்றி - வில்லி:2 82/3

மின்னி நாடுற விளங்கு வெம் சமர வீர வாகை பெறு வேலினான் - வில்லி:10 59/4

வென்று மாறு அடக்கும் வாகை விசயனும் வெகுண்டு உளம் - வில்லி:11 167/3

வாகை கொள் விசயனை வந்து புல்லியே - வில்லி:12 131/4

வென்றி கொள் வீர வாகை வேக வில் விசய கேளாய் - வில்லி:13 92/1

சிந்தை கன்றி விழி சிவந்து தெய்வ வாகை வில்லையும் - வில்லி:13 129/2

பூணொடு குழைகள் வாங்க புனை வய வாகை வாங்கும் - வில்லி:13 145/2

வய கொடு வெம் சராசனமும் வன் போர் வாகை மற தண்டும் கரத்து ஏந்தி மடந்தை நெஞ்சில் - வில்லி:14 15/2

மெய் வனப்பும் அடல் வலியும் மிகுத்த வாகை வீமன் எனும் பேர் திசையின் விளக்கும் வீரன் - வில்லி:14 18/2

முன் மருதூடு தவழ்ந்த வாகை மொய்ம்பற்கு - வில்லி:14 122/2

சலம் மிகு புவியில் என்றனன் வாகை தார் புனை தாரை மா வல்லான் - வில்லி:18 19/4

வேளையே அனைய எழில் தோகை வாகை வேளையே அனைய விறல் விசயன் என்னும் - வில்லி:22 139/3

மால் வரை ஒத்தனர் வாகை பெற கதிர் வாள்கள் எடுத்தவரே - வில்லி:27 192/4

மாயவன் அவனை நோக்கி வாகை அம் தாமம் சூட - வில்லி:29 13/2

வாகை வரி வில் ஒழிய வாள் அயில்கள் என்னும் - வில்லி:29 65/3

வானவர் துதிக்க வய வாகை புனைய கடவுள் வாழ்வு இனிது அளித்து வருவோன் - வில்லி:30 28/2

செழும் தார் வாகை விசயனையும் திருமாலையும் விட்டு ஒரு முனையாய் - வில்லி:31 9/3

மிகு நிறம் கொள் பைம் தாம வாகை போர் வென்று சூடினான் வீமசேனனே - வில்லி:35 4/4

நீ வில் எடுக்கில் அனைவேமும் உய்தும் நினையாரும் வாகை புனையார் - வில்லி:37 3/4

கொற்ற வாகை வாளினன் கூர வீர வேலினன் - வில்லி:38 6/2

வரு கணை தொடுத்து வாகை மிலைந்தனன் வஞ்சம் இல்லான் - வில்லி:39 9/4

முந்த வந்த மன்னனும் முரண் கொள் வாகை அரசரும் - வில்லி:40 41/1

முரசு எழுது பொன் பதாகை நிருபனும் முதல் அமர் செகுத்த வாகை அபிமனும் - வில்லி:40 48/3

ஒப்பு அறு போரினில் வாகை புனைந்த உதிட்டிரன் அன்று அடையார் - வில்லி:41 5/1

செல் முரிந்து என்ன ஏறு தேர் முரிந்து எடுத்த வாகை
  வில் முரிந்து உள்ளம்-தானும் மிக முரிந்து உடைந்து மீண்டான் - வில்லி:41 101/3,4

மாய முன் அடர்த்து வய வாகை புனையேனேல் - வில்லி:41 182/2

வலம் கொள் வாகை வீரர் சேனை வளைய நின்ற கன்னனை - வில்லி:42 20/3

வாகை நெட்டயில் துணிந்திடலும் வன்பினுடன் மா நிரைத்து இரதமும் கடவி வந்து முதல் - வில்லி:42 86/1

வென்று சாத்திய வாகை கொள் வில்லினான் - வில்லி:42 153/4

கருதி வாகை புனை விசயன் மேல் விசய கன்னன் முந்தி அமர் கடுகினான் - வில்லி:42 186/1

பொரு களம் கொண்டு வாகை புனைந்து அவண் நின்ற போதில் - வில்லி:43 12/2

வென்றி வாகை புனை விசயனோடு கரு மேக வண்ணன் வரு விதியுமே - வில்லி:43 43/4

பொழிதந்ததால் ஒர் பகழி அறன் அருள் புதல்வன் கை வாகை புனையும் வரி விலே - வில்லி:44 79/4

போர் செலுத்தி ஐவரையும் வென்று வாகை புனைதல் நமக்கு அரிது என்று போற்றினானே - வில்லி:45 25/4

புகல் அரிய தும்பையுடன் வெற்றி வாகை புனைந்திடும் இ கணத்தில் வலம்புரி தார் வேந்தன் - வில்லி:45 30/3

குடியாமல் அ குருதி கொப்பளித்து வாகை
  முடியாநின்று என் எண்ணம் முற்றினன் என்று ஆங்கண் - வில்லி:45 161/1,2

மரு மலி வாகை தாங்கு மன்னவர் திரளில் கூண்டு - சீறா:1716/2

மரு மலர் வாகை திண் தோள் முகம்மது மகிழ்ந்த வாறும் - சீறா:3084/3

கடி திரை உவரி ஏழும் கடப்பன போன்றும் வாகை
  விடுவிடென்று அதிர்ந்து தாவும் வெம் பரி குழுவின் வேகம் - சீறா:3408/3,4

வாகை அம் திரு தோழர்களிடத்தினில் வந்தார் - சீறா:3829/4

வடிவு எடுத்து அனைய மான மன்னர்காள் விசய வாகை
  குடிபுகுந்து இருந்த திண் தோள் குரிசில்காள் மனத்தில் தூக்கி - சீறா:4189/2,3

மரு மலி வாகை திண் தோள் மன்னவர் சகுதும் போனார் - சீறா:4631/4

வாகை நான் பெறுக எற்கு வாய்மை தம்-மின்கள் என்று - சீறா:4906/2

தேட அரும் வாகை சூடியே விரைவில் சென்றனர் ஒரு தனி சிங்கம் - சீறா:4933/4

மாறுபடும் அவுணர் மாள அமர் பொருது வாகை உள மவுலி புனைவோனே - திருப்:159/5

வாகை புனையும் ரண ரங்க புங்கவ வயலூரா - திருப்:359/12

வாகை வேடர் பேதை காதல வேழ மங்கையை புணர்ந்த வெற்ப கந்த செந்தில் வேளே - திருப்:469/6

சிந்திட வேல் விடு வாகை திண் புய வேளே - திருப்:491/14

வாகை பெற்ற புயங்கள் கறேல்கறேல் என எதிர் கொள் சூரன் - திருப்:543/10

வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவிளம் கொழுந்து வால சோமன் அஞ்சு பொங்கு பகு வாய - திருப்:734/6

வாகை துதைந்து அணி கேதகை மங்கிட மோதி வெகுண்டு இள மதி தோயும் - திருப்:790/6

வாரி பொட்டு எழ க்ரவுஞ்சம் வீழ நெட்ட அயில் துரந்த வாகை மல் புய ப்ரசண்ட மயில் வீரா - திருப்:828/6

வாகை என்ப இதழும் சலசம் என்ப கள சங்கு மோக - திருப்:829/4

உரமுடைய அரி வடிவதாய் மோதி வீழ விரல் உகிர் புதைய இரணியனை மார் பீறி வாகை புனை - திருப்:870/11

வாகு தோளில் அணைத்தும் மாகம் ஆர் பொழில் உற்ற வாகை மா நகர் பற்று பெருமாளே - திருப்:990/8

அடல் கெடாத சூர் கோடி மடிய வாகை வேல் ஏவி அமர் செய் வீர ஈராறு புய வேளே - திருப்:1050/5

அழகிய கலாப கற்றை விகட மயில் ஏறி எட்டு அசலம் மிசை வாகை இட்டு வரும் வேலா - திருப்:1097/7

தோள் மாலையாக அணியும் கோவும் பரவி வாழ்த்திடவே கற்று ஆர சோதிப்பான் பணி இறை வாகை - திருப்:1150/14

வாகை புனைந்து ஒரு வென்றி கொண்டு அருள் இளையோனே - திருப்:1180/12

வாகை விஜயன் அடல் வாசி பூட்டிய தேரை முடுகி நெடு மால் பராக்ரம - திருப்:1196/15

ஆவல் கூர மண் முதல் சலசம் பொன் சபையும் இந்து வாகை - திருப்:1313/2

காய்த்த வாகை நெற்று ஒலிப்ப கல் அதர் வேய் கழை போய் - நாலாயி:1015/3

சென்று தும்பை துறை முடித்தும் செருவில் வாகை திறம் கெழுமி - 7.வார்கொண்ட:6 3/2

புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து - 9.கறை:3 7/4

காரைகள் கூகை முல்லை கள வாகை ஈகை படர் தொடரி கள்ளி கவினி - தேவா-சம்:2377/1

வாகை நுண் துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே - தேவா-சம்:2486/4
வாகை
வாகை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *