Skip to content
குடசம்

குடசம் என்பது ஒருவகை மரமாகும்.

1. சொல் பொருள்

(பெ) வெட்பாலை, வெப்பாலை, பூவரசம் பூ?, குடசப்பாலை? கருப்பாலை?

2. சொல் பொருள் விளக்கம்

இதற்கு வெட்பாலை, நிலப்பாலை, பாலை, நிலமாலை, வற்சம் ஆகிய வேறு பெயர்களும் உண்டு. பட்டை உரிக்கப்பட்ட மரம், தந்தம் போல வெண்மையாகக் காணப்படும். இதற்குத் தந்தப்பாலை என்ற பெயரும் உண்டு.

பாலைத் திணைக்குரிய மரம் என்பதாலும் வெட்‘பாலை’ என்ற பெயர் உருவானது. எதிரடுக்கில் அமைந்த இலைகளும் உச்சியில் வெண்ணிற மலர் கொத்துகளையும் பால் போன்ற சாற்றினையும் உடைய இலையுதிர் மரம்.

வெட்பாலை
வெட்பாலை

இதன் இலைக் காம்பை உடைத்தால் பால் வெளியாகும். இதன் காய்கள், தலைகீழாகத் திருப்பிய ஆங்கில ‘V’ வடிவத்தில், கருமையான குச்சிகளாகக் காட்சி அளிக்கும். ‘குறடு’ போல இருக்கும் இதன் காய்களைப் பற்றி நற்றிணையில் பேசப்பட்டுள்ளது.

காய்க்குள் இருக்கும் அரிசிக்கு வெட்பாலை அரிசி என்று பெயர். இதன் இலைகளைக் கிள்ளினால் வரும் பாலை, ஓரிரு துளிகள் பாலில்விட, பாலிலுள்ள வெண்ணெய் தனியாகப் பிரிந்துவிடும?

வெட்பாலை எண்ணெய்
வெட்பாலை எண்ணெய்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Wrightia Tinctoria, Conessi bark, Holarrhena anti-dysenterica, Wall., Holarrhena pubescens

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

குடசம்
குடசம்
வடவனம் வாகை வான் பூ குடசம் / எருவை செருவிளை மணி பூ கருவிளை– குறி 67

வடவனம், வாகை, வெண்ணிறப் பூவுடைய வெட்பாலைப்பூ

குரல் தலை கூந்தல் குடசம் பொருந்தி - மது:14/87

குடசமும் வெதிரமும் கொழும் கொடி பகன்றையும் - மது:13/157

குடசமும் வெதிரமும் கொழும் கால் அசோகமும் - மணி:3/164

குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு - தேவா-சம்:3756/2
வெப்பாலை
வெப்பாலை
குடசம்
குடசம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *