Skip to content

சொல் பொருள்

நிறைவேறு, நிறைவேற்று, முடிச்சுப்போடு, கட்டு, சூடு, அணி, இறுதிநிலை அடை, முற்றுப்பெறு, நாற்றுக்கட்டு, முடிச்சு, கிரீடம், முடிச்சுப்போடுதல், மயிர்,

சொல் பொருள் விளக்கம்

நிறைவேறு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be accomplished, accomplish, tie, fasten, make into a knot, put on, adorn, end, come to a close, terminate, bundle of (paddy) seedlings for transplantation, knot, crown, fastening into a knot, hair

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இன்னா அரும் படர் தீர விறல் தந்து
இன்னே முடிக தில் அம்ம ———
———————————— —————————
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறை தொழிலே – நெடு 167-188

தீதாக இருக்கின்ற ஆற்றுதற்கரிய துயரம் தீரும்படி, வெற்றியைக் கொடுத்து
இப்பொழுதே முடிவதாக ————-
———————————– ————————
நள்ளென்னும் ஓசையையுடைய நடுயாமத்திலும் பள்ளிகொள்ளாதவனாய்,
ஒருசில வீரரோடு திரிதலைச் செய்யும் அரசன்,
பலரோடு மாறுபட்டுப் பொருகின்ற பாசறையிடத்துப் போர்த்தொழில்

அதனால் செல்-மின் சென்று வினை முடி-மின் சென்று ஆங்கு
அவண் நீடாதல் ஓம்பு-மின் – நற் 229/5,6

அதனால் செல்லுங்கள், சென்று பொருளீட்டும் வினையை முடியுங்கள், சென்றபின் அங்கு
அவ்விடத்திலேயே நீண்டநாள் தங்காமல் காத்துக்கொள்ளுங்கள்

துவர முடித்த துகள் அறும் முச்சி
பெரும் தண் சண்பகம் செரீஇ – திரு 26,27

முற்ற முடித்த குற்றம் இல்லாத கொண்டையில்
பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் செருகி

இணைத்த கோதை அணைத்த கூந்தல்
முடித்த குல்லை இலை உடை நறும் பூ – திரு 200,201

பிணைக்கப்பட்ட மாலையினையும், சேர்த்தின கூந்தலையும் உடையராய்,
தலையிலே அணிந்த கஞ்சங்குல்லையினையும், இலையையுடைய நறிய பூங்கொத்துக்களையும்,

முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும்
கடந்து அவை அமைந்த கழலின் நிழலவை – பரி 13/47,48

முடிந்துபோனதும், இனி முடியப்போவதும், இப்போது தோன்றியிருப்பதும் ஆகிய மூன்று காலங்களும்
கடந்து, அவை பொருந்தப்பெற்ற உன் திருவடிகளின் நிழலில் உள்ளவை;

கார் ஏறு பொருத கண் அகன் செறுவின்
உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர்
முடி நாறு அழுத்திய நெடு நீர் செறுவில் – பெரும் 210-212

கரிய ஆனேறுகள் பொருத இடமகன்ற வயல்களில்,
(தம்மால்)உழப்படாத (அந்த)நுண்ணிய சேற்றை(க் காலால் சமப்படுத்திய)உழவர்
முடி(யாக வீசிய)நாற்றை அழுத்தி நட்ட நீண்டநாள் நிற்கும் நீரையுடைய வயலில்

தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின் – பெரும் 273,274

தோள்களும் அமிழும் குளங்களினுடைய கரையைக் காத்திருக்கும்,
வளைந்த முடிச்சுகளையுடைய வலைகளையுடையோருடைய குடியிருப்பில் தங்குவீராயின் –

கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின்
முடி உடை கரும் தலை புரட்டும் முன் தாள்
உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானை – பட் 229-231

காவலையுடைய அரண்களைப் பிடித்த (கோட்டைக்)கதவை முறிக்கும் கொம்பினையும்,
கிரீடங்களையுடைய கரிய தலைகளை உருட்டும் முன்காலின்
நகமுடைய அடிகளையும் கொண்ட உயர்ந்த அழகினையுடைய யானை,

முடி முதிர் பரதவர் மட மொழி குறு_மகள் – நற் 207/9

வலையை முடிதலில் திறமைகொண்ட பரதவரின் மடப்பமுள்ள மொழியையுடைய இளமகள்

வெறி கமழ் துறு முடி தயங்க நல் வினை
பொறி அழி பாவையின் கலங்கி – நற் 308/6,7

மணங்கமழும் அடர்ந்த கூந்தல் அசைய, நல்ல வேலைப்பாடான,
செலற்றுப்போன பாவையைப் போலக் கலங்கி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *