Skip to content
முண்டகம்

முண்டகம் என்பது கழிமுள்ளி

1. சொல் பொருள்

கழுதைப்பிட்டி அல்லது கழிமுள்ளி, கழுதைமுள்ளி

2. சொல் பொருள் விளக்கம்

இதன் தாயகம் இலங்கையின் புங்குடு தீவில் இருக்கும் பகுதியான, கழுதைப்பிட்டித் துறை என அறியப்படுகிறது. அதனால் தான் இதன் பெயரில் கழுதைப்பிட்டி என்ற அடைமொழி அமைகிறது.

இலைகளின் விளிம்புகள் முட்களுடன் காணப்படும். பூக்களின் இதழ் வெளிர் நீலமாக இருக்கும். ஒரு பெரிய பூவிதழை உடையது. பூக்கள் கொத்துகளாகக் காணப்படுகிறது

முண்டகம்
முண்டகம்

மொழிபெயர்ப்புகள்

 holly-leaved acanthus, holly mangrove, sea holly • Bengali: hargoza • Hindi: हड़कत harkata • Kannada: ಹೊಳೆಸುಳ್ಳಿ holesulli • Konkani: मारांडो maramdo • Malayalam: ചക്കരമുള്ള് chakkaramullii • Marathi: मारंडी marandi, वागाटी vagati • Sanskrit: हरीकुसा harikusa • Tamil: கழுதைமுள்ளி kalutaimulli • Telugu: ఆలస్యకంప alasyakampa • Urdu: هڙکت harkata

3. ஆங்கிலம்

 indian nightshade, Acanthus ilicifolius, Holy Mangrove

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

முண்டகம்
முண்டகம்
கூன் முள் முண்டக கூர்ம் பனி மா மலர் – குறு 51/1

வளைந்த முட்களையுடைய கழிமுள்ளியின் நடுக்கும் பனிக்காலத்து கரும் மலர்

அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணி கேழ் அன்ன மா நீர் சேர்ப்ப – குறு 49/1,2

அணிலின் பல்லைப்போன்ற பூந்தாதுக்கள் முதிர்ந்திருக்கும் கழிமுள்ளிச்செடியுள்ள
நீலமணியின் நிறம் போன்ற பெரிய கழியினுக்கு உரிமையாளனே!

அணில் பல் முண்டகத்தின் முள்ளுக்கு உவமை. முண்டகம் – கழிமுள்ளிச்செடி – உ.வே.சா – உரை விளக்கம்

கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் – சிறு 148

முதல் சூலையுடைய கழிமுள்ளி ஒளியையுடைய நீலமணிபோலப் பூக்கவும்

முண்டகம் வேய்ந்த குறி இறை குரம்பை – நற் 207/2

கழி முள்ளிகளால் மேலே வேயப்பட்ட குறுகிய கூரையையுடைய வீடு

இம் முள்ளி வகை கழிக்கரையிலும் கடற்கரையிலும் காடுபோல் வளர்ந்திருக்கும். இவற்றை அறுத்து ஆண்டு
வாழும் நுளையர் தம் வீடுகட்குக் கூரையாகவேய்வது இயல்பு – ஔவை.சு.து. உரை விளக்கம்.

சங்க இலக்கியங்களில், மருதத்திணை சார்ந்து குறிப்பிடுகையில் நீர்முள்ளி செடிகள் ”முள்ளி” எனவும்,
நெய்தற்திணை சார்ந்து குறிப்பிடுகையில் கழிமுள்ளி செடிகள் ”முண்டகம்” எனவும் வழங்கப்பட்டுள்ளன.
மருதத்திணையின் நன்னீர்நிலைகளில் வளரக் கூடிய நீர்முள்ளியும் [Hygrophila auriculata], அதனையடுத்துள்ள
நெய்தற்திணையின் உப்பங்கழி ஓரங்களில் வளரக்கூடிய கழிமுள்ளியும் [Acanthus ilicifolius]
”அக்காந்தேசி” [Acanthaceae] எனும் ஒரே தாவரவியல் குடும்பதைச் சேர்ந்தவை.
இவ்விரு தாவரங்களும் முட்களைப் பெற்றுள்ளதோடு, நீலநிறப் பூக்களையும் கொண்டுள்ளன.

இது ஐந்தடி வரை நிமிர்ந்தும் அடர்ந்தும் வளரக் கூடிய முட்புதற்செடி. இலைப்பரப்பு வளைந்தும் நெளிந்தும்
பிளவுற்றும், விளிம்பில் முட்களையும் பெற்றுள்ளது. நுனியிலும் இலைக்கோணத்திலும் பெரிய அளவில்
நீலநிறப் பூக்களை தோற்றுவிக்கும். கடலும் கடல்சார்ந்த பகுதியாகிய நெய்தற்திணையில் உப்பங்கழியின்
ஓரங்களில் முண்டகம் வளர்கின்றன.

சங்க இலக்கியங்களில் கண்டுள்ளவாறு இதன் பண்புகள்

1. உப்பங்கழியில் வளர்தல்
2. உப்பங்கழியில் கண்டல் மரங்களுடன் காணப்படுதல்
3. உப்பங்கழியில் தில்லை மரங்களுடன் வளர்தல்
4. அணில் பற்களை போன்று முட்களைப் பெற்றிருத்தல்
5. நீலநிற மணிகளைப் போன்று மலர்கள் பெற்றிருத்தல்
6. மீன் முட்களைப் போன்று முட்கள் கொண்டிருத்தல்
7. வளைந்த முட்கள் [கூன் முள்] கொண்டிருத்தல்

பயன்பாடுகள்

1. முண்டகச் செடிகளைக் கூரை வேய்தல்
2. முண்டக மலர்களை மகளிர் சூடுதல்

முண்டக கோதையொடு முடித்த குஞ்சியின் - வஞ்சி:27/235

முறைமையின் கடன் முறை முற்றி முண்டகத்து
இறைவனும் அவரொடும் இனிதின் ஏகினான் - பால-மிகை:5 3/3,4

தழை இல் முண்டகம் தழுவி கானிடை - அயோ:11 131/3

கூன் முள் முண்டக கூர்ம் பனி மா மலர் - குறு 51/1

முண்டக கோதை நனைய - ஐங் 121/2

முண்டக நறு மலர் கமழும் - ஐங் 177/3

முண்டக கோதை ஒண் தொடி மகளிர் - புறம் 24/11

மணி பூ முண்டகத்து மணல் மலி கானல் - மது 96

அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை - நற் 245/2

அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து/மணி கேழ் அன்ன மா நீர் சேர்ப்ப - குறு 49/1,2

கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் - சிறு 148

மணி பூ முண்டகம் கொய்யேன் ஆயின் - நற் 191/9

முண்டகம் வேய்ந்த குறி இறை குரம்பை - நற் 207/2

வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய் சேறு புலர்ந்து - நற் 311/3

முண்டகம் மலரும் தண் கடல் சேர்ப்பன் - ஐங் 108/2

மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன் - கலி 133/1

முண்டகம் கலித்த முது நீர் அடைகரை - அகம் 80/7

முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை - அகம் 130/4

முண்டக கானலுள் கண்டேன் என தெளிந்தேன் - ஐந்70:61/3
முண்டகம்
முண்டகம்
கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள் - தேவா-அப்:115/1

கா மரு தண் கழி நீடிய கானல கண்டகம் கடல் அடை கழி இழிய முண்டகத்து அயலே - தேவா-சம்:1465/3

சேய தண் நறும் செழு முகை செறியும் முண்டகங்கள்
ஆய நுண் மணல் வெண்மையை மறைப்பன அன்னம் - 4.மும்மை:5 37/2,3

சைவ வெண் திருநீற்று முண்டகத்து ஒளி தழைப்பும் - 2.தில்லை:7 7/2

கட்டி முண்டக அரபாலி அங்கிதனை முட்டி அண்டமொடு தாவி விந்து ஒலி - திருப்:471/1

சதுர் ஆகத்தோடு கூட்டி அண்டர்கள் அறியா முத்தமிழ் ஊட்டி முண்டக
தளிர் வேத துறை காட்டி மண்டலம் வலம் மேவும் - திருப்:810/3,4

சிவஞான பொருள் ஊட்டும் முண்டக அழகோனே - திருப்:810/12

மூல முண்டகம் அனுபூதி மந்திர பராபரம் சுடர்கள் மூணு மண்டல அதார - திருப்:762/1

நாலிரண்டு இதழாலே கோலிய ஞால் அம் முண்டகம் மேலே தான் இள - திருப்:998/1

முண்டக செழு மலர் சொரி தலை முகம் கவிழ - சீறா:197/3

முண்டக கரத்தால் தாங்கியே பருக முதிர் பரதாபமும் நீங்கி - சீறா:244/3

முண்டக மலர் தாளினில் விழி சேர்த்தி முகம்மதை போற்றி வாழ்த்தினரே - சீறா:359/4

முண்டக தடம் அமர்ந்தில புள் ஒலி முழக்கம் - சீறா:871/2

முண்டக தடமும் செவ்வி முருகு அவிழ் கழனி காடும் - சீறா:1719/3

முண்டக மலர் பதம் இருத்தி முடி மீது - சீறா:1778/2

முண்டக மலரின் வாய்ந்த முகத்தை என் தாளில் சேர்த்தி - சீறா:2775/3

முடிவின்றிய அருட்கு ஓர் மனை எனும் முண்டக விழியில் - சீறா:4332/3

தோட்டு முண்டகத்தை மற்று ஓர் கமலத்தால் துடைத்தது ஒத்தே - சீறா:3933/4

ஐயம் அற்று அணிந்து கஞ்சுகி மேனி அழகுற போர்த்து முண்டகமாம்
கையினில் அசா கோல் ஒன்றினை தாங்கி கால் இணை கபுசினில் புகுத்தி - சீறா:4090/2,3

முண்டக குலத்து மாதர் முகம் குவிந்து ஊடி நிற்ப - வில்லி:27 162/2

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *