சொல் பொருள்
ஒரு பாண்டிய மன்னன்
சொல் பொருள் விளக்கம்
ஒரு பாண்டிய மன்னன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a pandiyan king
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல்சாலைமுதுகுடுமியின் நல் வேள்வி துறைபோகிய – மது 759,760 (பலவாகிய வேள்விச் சாலைகளைக் கண்ட பாண்டியன்)பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று, நல்ல வேள்வித்துறைளில் முற்றும் தேர்வாயாக, இவன் கடைச்சங்க காலத்துக்கும் முற்பட்ட முற்காலப் பாண்டியருள் ஒருவன் என்பார் சிலர். குடுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான். மூத்த குடும்பன் என்பதனால் முதுகுடுமி என அழைக்கப்பட்டான். பல யாகங்களை நடத்திய காரணத்தினால் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான் வழுதி என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் நெடியோன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான். இவனை நெட்டிமையார் (புறம் 9,12,15), காரிகிழார் (புறம் 6), நெடும்பல்லியத்தனார் (புறம் 64) ஆகிய புலவர்கள் பாடிய பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்