Skip to content

முத்தனும் பெத்தனும்

சொல் பொருள்

முத்தன் – முத்தி நிலை பெற்றோன்.
பெத்தன் – பெருநிலை அல்லது ஒடுக்கநிலை பெற்றோன்.

சொல் பொருள் விளக்கம்

‘முத்தனும் பெத்தனும்’ என்பது சமயநூல் இணைச் சொற்கள். முத்தனைச் ‘சீவன் முத்தன்’ எனவும் கூறுவர். பெத்த நிலை’ பெத்த முத்தி எனப்படும். முத்த நிலை என்பது முழுமை பெற்றோன்நிலை. முத்தன் முழுதுணர்ந்தோன்; அவன் நிலையை அறிந்தோர் மண்ணுலகில் வாழும் போதே முத்தன் பெத்தன் என வழங்குகின்றனர். முடிவினை அறிந்தபின் கூறப்படுவதன்றாம். புத்தன் அருகன் முதலியோரை ‘ முத்தன்’ என்பதைக் கொண்டு அறிக.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *