சொல் பொருள்
(பெ) 1. வெறுப்பு, 2. கோபம், 3. வருத்தம்,
சொல் பொருள் விளக்கம்
வெறுப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dislike, aversion, anger, suffering
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாழ்தல், இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னாது என்றலும் இலமே – புறம் 192/4-6 வாழ்தலை இனிது என்று உவந்ததும் இலம், ஒரு வெறுப்பு வந்தவிடத்து இன்னாதென்று இருத்தலும் இலம் முனிவு இல் பரத்தையை என் துறந்து அருளாய் – நற் 230/6 உன்மேல் கோபம் இல்லாத உன் பரத்தைக்கு, என்னைத் துறந்து, அருள்செய்வாய்! முனிவு இகந்திருந்த முது வாய் இரவல – சிறு 40 (வழி)வருத்தம் தீர்ந்திருந்த பேரறிவு வாய்க்கப்பெற்ற இரவலனே,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்