Skip to content

சொல் பொருள்

(வி) 1. மாறுபடு, எதிராகு, பகைகொள்

2. (பெ) 1. மாறுபாடு, எதிரான நிலை, ஒத்திரு, பகைமை

சொல் பொருள் விளக்கம்

மாறுபடு, எதிராகு, பகைகொள்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be at variance, be opposed, be in conflict with, variance, opposition, be similar to, being inimical

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கருவிளை முரணிய தண் புதல் பகன்றை
பெருவளம் மலர அல்லி தீண்டி – அகம் 255/11,12

கருவிளையின் பூவினொடு மாறுபட்ட குளிர்ந்த பகன்றைச் செடியின்
மிக்க செழுமையுடைய மலர்களின் அகவிதழை அசைத்து

வேந்தனும் வெம் பகை முரணி ஏந்து இலை
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை – அகம் 214/5,6

அரசனும் மிக்க பகையொடு மாறுபட்டு, நிமிர்ந்த இலையினையுடைய
ஒளி விடுகின்ற நீண்ட வேல் மின்னும் பாசறைக்கண்ணேயிருந்து

சிறு கிளி முரணிய பெரும் குரல் ஏனல் – நற் 389/6

சிறு கிளிகள் கொத்தியழிக்கும் பெரிய கதிர்களையுடைய தினைப்புனத்தின்
முரணுதல் – மாறுகொண்டழித்தல் – பின்னத்தூரார் உரை விளக்கம்.

செருவேட்டு
இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி
சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய – புறம் 99/8-10

போரை விரும்பி
ஒலிக்கும் ஓசை பொருந்திய முரசினையுடைய ஏழு அரசரோடு பகைத்து
மேற்சென்று போரின்கண் வென்று நின் வலியைத் தோற்றுவித்த

பொரு கயல் முரணிய உண்கண் – குறு 250/5

ஒன்றை ஒன்று எதிர்ந்த இரண்டு கயல்களை ஒத்த மையுண்ட கண்களையும்
முரணிய – உவம வாசகம் – உ.வே.சா உரை, விளக்கம்.

முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி – திரு 84

முடியோடு விளங்கிய (ஒன்றற்கொன்று)மாறுபாடு மிகும் அழகினையுடைய மணிகள்

முது மரத்த முரண் களரி – பட் 59

பழைமையான மரத்தின் (கீழான) மற்போர் (செய்யும்) களங்கள் (கொண்ட பட்டினம்)

மறம் கொள் இரும் புலி தொன் முரண் தொலைத்த
முறம் செவி வாரணம் – கலி 42/1,2

“வீரங்கொண்ட பெரிய புலியுடனான தன் பழம் பகையைத் தீர்த்துக்கொண்ட
முறம் போன்ற காதுகளைக் கொண்ட யானை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *