Skip to content

சொல் பொருள்

(பெ) முன்பு, கடந்தகாலம்

சொல் பொருள் விளக்கம்

முன்பு, கடந்தகாலம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

past, earlier times

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முரம்பு தலைமணந்த நிரம்பா இயவின்
ஓங்கி தோன்றும் உமண் பொலி சிறுகுடி
களரி புளியின் காய் பசி பெயர்ப்ப
உச்சி கொண்ட ஓங்கு குடை வம்பலீர்
முற்றையும் உடையமோ மற்றே பிற்றை
வீழ் மா மணிய புனை நெடும் கூந்தல்
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப
விருந்து அயர் விருப்பினள் வருந்தும்
திருந்து இழை அரிவை தே மொழி நிலையே – நற் 374

சரளைக் கற்கள் பரவிக்கிடந்த, சென்று முடியாத நீண்ட வழியில்,
உயர்ந்து தோன்றும் உமணர்கள் நிறைந்திருக்கும் சிறிய ஊரினரின்
களர்நிலத்துப் புளிச்சுவைகொண்டு, அவரின் வருத்தும் பசியைப் போக்க,
தலை உச்சியில் கொண்ட உயர்ந்த சோற்றுப்பொதிகளையுடைய அயலூர் மக்களே!
முன் நாளிலும் பெற்றிருக்கிறோம் – இப்பொழுது பெறப்போகும்,
விரும்பப்படும் கரிய மணியைப் போன்ற, புனையப்பட்ட நீண்ட கூந்தலையுடையவள்,
கண்ணீர் வடிந்து சொட்டுச் சொட்டாக மார்பினை நனைக்க,
நமக்கு விருந்து வைக்கும் விருப்பினளாய் தன்னை வருத்திக்கொள்ளும்
திருத்தமான அணிகலன்களை அணிந்த அரிவையாகிய இன்மொழிக்காரியின் நிலையை –

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *