சொல் பொருள்
(வி) எழு, தோன்று, உதி
(பெ) 1. மூங்கில் போன்ற தாவரங்களின் கணுக்களினின்றும் வெளிப்படும் மென்மையான பகுதி,
விதை, கிழங்கு ஆகியவற்றினின்றும் வெளிப்படும் மென்மையான பகுதி
முளைத்து வருவன எல்லாம் முளை
மூங்கில்
பாவை
முளைப்பாரி அல்லது முளைப்பாலிகை என்பது மங்கல விழா
சொல் பொருள் விளக்கம்
முளைத்து வருவன எல்லாம் முளை எனப்படுவதேயாம். ஆனால் விளவங்கோடு வட்டாரத்தில் முளை என்பது மூங்கில் என்பதைக் குறித்து வழங்குகின்றது. முளைப்பாரி அல்லது முளைப்பாலிகை என்பது மங்கல விழா, திருவிழாக்களின் அடையாளமாக இருப்பதையும், முளை என்பது ‘பாவை’ என வழங்கப்படுதலும் எண்ணலாம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rise, appear, come to light
tender shoot of trees or plants
sprout, seed-leaf
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல் – பொரு 72 வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே இரு வெதிர் ஈன்ற வேல் தலை கொழு முளை – நற் 116/4 பெரிய மூங்கிலில் முளைத்த வேல்முனையைப் போன்ற தலையைக் கொண்ட கொழுத்த முளைகளை முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும் – பெரும் 53 (மூங்கில்)முளை(போன்ற) கொம்பினையுடைய கரிய பிடியின் முழந்தாளை ஒக்கும் விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி மறந்தனம் துறந்த காழ் முளை அகைய – நற் 172/1,2 விளையாட்டுத் தோழியருடன் வெள்ளையான மணலில் ஊன்றிவைத்துப் பின்னர் மறந்தவராய் விட்டுப்போன விதையினின்றும் முளை தோன்ற சேம்பின், முளை புற முதிர் கிழங்கு ஆர்குவிர் – பெரும் 361,362 சேம்பின், முளையைப் புறத்தேயுடைய முதிர்ந்த கிழங்குகளைத் தின்பீர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்