சொல் பொருள்
மூக்கு – மூக்கின் எடுப்பான தோற்றம்.
முழி(விழி) – விழியின் கவர்ச்சியான தோற்றம்.
சொல் பொருள் விளக்கம்
ஒரு குழந்தையைப் பார்த்து அழகாக இருந்தால்’மூக்கும் முழியும்’ எப்படி இருக்கிறது என வியந்து கூறுவது தாய்மைச் சீர். மூக்கு என்பதற்கு ஏற்ப ‘விழி’ மோனைப்பட ‘முழி’ ஆயிற்று. “வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா காணீரே” என்பது பெரியாழ்வார் திருமொழி.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்