Skip to content

சொல் பொருள்

பழைமையான ஊர்,

சொல் பொருள் விளக்கம்

பழைமையான ஊர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

ancient town

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மூதூரில் விழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும். கொடிகள் அசையும் அகன்ற கடைத்தெருக்கள் இருக்கும். நகருக்குக்
காவல் பலமாக இருக்கும்.

நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் – சிறு 201

புழுதி அடங்கின தெருவினையுடைய, அவ்வள்ளலின் விழா நடக்கின்ற பழைய ஊர்தானும்

விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர் – பெரும் 411

விழாக்களால் மேம்பட்ட பழைய வெற்றிச்சிறப்பையும் உடைய தொன்மையான ஊராகிய காஞ்சி நகர்

அரும் கடி மூதூர் மருங்கில் போகி – முல் 7

அரிய காவலையுடைய பழைய ஊரின் எல்லையில் போய்

மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நெடு 29,30

மாடங்கள் உயர்ந்துநிற்கும் வளப்பமுள்ள பழைய ஊரில்,
ஆறு கிடந்தால் போன்ற அகன்ற நெடிய தெருவில்,

துஞ்சா முழவின் மூதூர் வாயில் – குறி 236

செயலற்று இராத(எப்போதும் ஒலிக்கும்) முழவினையுடைய பழைய (நம்)ஊர் வாயிலில்

சாறு அயர் மூதூர் சென்று தொக்கு ஆங்கு – பட் 215

திருவிழா நிகழும் பழைமையான ஊருக்குச் சென்று குடியேறினாற்போன்று,

நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர் – நற் 45/4

நெடிய கொடிகள் மடங்கி அசையும் கடைத்தெருக்களைக் கொண்ட பழைய ஊரின்

ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர் – நற் 90/1

ஆட்டங்களைக் கொண்ட திருவிழாவின் ஆரவாரம் உள்ள பழமையான ஊரில்,

விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர் – நற் 293/4

திருவிழாவை மேற்கொண்ட பழமைச் சிறப்புவாய்ந்த மூதூரில்

பெரும் கலி மூதூர் மரம் தோன்றும்மே – நற் 321/10

பெருத்த ஆரவாரத்தையுடைய நமது பழமையான ஊரின் மரங்கள் தெரிகின்றன

விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்
கொடு நிழல் பட்ட பொன் உடை நியமத்து – பதி 15/18,19

விழாக்கள் இல்லாமல் இருப்பதை அறியாத, முழவுகள் முழங்கும் மூதூர்களில்
கொடிகளின் நிழலில் இருக்கும் பொன்னை மிகவும் உடைய கடைத்தெருக்களில்

முழவு இமிழ் மூதூர் விழவு காணூஉ பெயரும் – பதி 30/20

முழவுகள் முழங்குகின்ற பழமையான ஊரில் விழாவினைக் காண்பதற்காகச் செல்லுகின்ற,

விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர் – அகம் 17/19

திருவிழாவை மேற்கொண்ட பழமைச் சிறப்புவாய்ந்த முதிய ஊரில்

நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர் – அகம் 83/7

நீண்ட கொடிகள் அசையும் அங்காடிகளையுடைய பழைமையான ஊரில்

அரும் கடி காப்பின் அஞ்சு வரு மூதூர் – அகம் 114/12

அணுகுதற்கு மிக்க காவலினையுடைய பகைவர்க்கு அச்சத்தைத் தரும் மூதீர்

அழியா விழவின் அஞ்சுவரு மூதூர் – அகம் 115/1

என்றும் நீங்காத விழாவினையுடைய பகைவர்க்கு அச்சம் தரும் இம் முதிய ஊரின்கண்ணே

செம்பு உறழ் புரிசை செம்மல் மூதூர் – புறம் 37/11

செம்பு பொருவும் மதிலையுமுடைய தலைமை பொருந்திய பழைய ஊரினுள்ளே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *