Skip to content

சொல் பொருள்

தொன்மை, பழைமை, முதுமை

சொல் பொருள் விளக்கம்

தொன்மை, பழைமை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

ancientness, oldness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முன்நாள் விட்ட மூது அறி சிறாஅரும் – புறம் 382/11

முன்னாள் நீ பரிசில் தந்து விட்ட தொன்முறை அறிந்த சிறுவரும்

கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர்
ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த
படு முடை பருந்து பார்த்து இருக்கும்
நெடு மூது இடைய நீர் இல் ஆறே – குறு 283/5-8

கூற்றுவனைப் போன்ற கொலைத்தொழிலையுடைய வேலைக் கொண்ட மறவர்
வழியில் இருந்து தங்கி வழிச்செல்வோரைக் கொன்றதனால்
உண்டான அழுகியபுலாலைப் பருந்துகள் எதிர்நோக்கி இருக்கும்
நீண்ட பழைய இடங்களிலுள்ள நீர் இல்லாத வழியில்

பசும்பழப் பாகல்
கூதள மூது இலை கொடி நிரை தூங்க – அகம் 255/13,14

அழகிய பழத்தினையுடைய பாகற்கொடிகள்
கூதாளியின் முதிய இலைகளையுடைய கொடிகளின் கூட்டத்தில்கிடந்து அசையும்படி செய்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *