மெத்தை என்பது மென்படுக்கை
1. சொல் பொருள்
- மெது > மெத்து > மெத்தை = மென்படுக்கை, மாடி.
2. சொல் பொருள் விளக்கம்
மெத்து மெத்து என்பது மென்மைத் தன்மையது என்னும் பொருளது. சிறிது சிறிதாக மண், கல் முதலியவற்றைப் போட்டு, பள்ளம் குழி ஆயவற்றை மூடுதல் மெத்துதல் ஆகும்.
பஞ்சு, துணி ஆகிய மென்பொருள்கள் பலவற்றை உறையுள் போட்டுப் படுக்கையாகப் பயன்படுத்துவது உண்டு. அதன் தன்மையால் ‘மெத்தை’எனப்பட்டது.
‘மாடி’என்பது அடித்தள வீட்டின் மேல் எழுப்பப்பட்டது. பெரும்பாலும் கம்புகள் இலை தழைகள் ஆயவற்றைப் பரப்பி மண்சேறு பூசிச் செய்யப்பட்ட மண் பரணையே முதற்கண் மெத்தை எனப்பட்டுப் பின்னர் மாடி என்னும் பொருள் தருவதாயிற்று. மெத்தை வீடு, மெத்தைக் கட்டில் என்பவை வழக்கில் உள்ளவை.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Mattress
4. பயன்பாடு
இது ஒரு வழக்குச் சொல்