Skip to content
கரும்பு

கரும்பு என்பது ஒருவகைப் புல்

1. சொல் பொருள்

(பெ) 1. ஒருவகைப் புல், செங்கரும்பு.

2. சொல் பொருள் விளக்கம்

சர்க்கரை உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு தாவரமாகும். இது வெள்ளை, மஞ்சள், சிவப்பு, ஊதா என நிறத்தை அடிப்படையாகக் கொண்டு நான்கு வகைப்படும்.

மொழிபெயர்ப்புகள்

Englishsugarcane, Sugar cane العربية: قصب السكر المخزني مصرى: قصب السكر المخزنى azərbaycanca: Şəkər qamışı تۆرکجه: شکر قامیشی Basa Bali: Tebu български: обикновена захарна тръстика bosanski: Šećerna trska català: Canya de sucre čeština: Cukrová třtina kaszëbsczi: Cëkrowô strzëna dansk: Almindelig sukkerrør Deutsch: Zuckerrohr Ελληνικά: Ζαχαροκάλαμο Esperanto: Sukerkano eesti: Suhkruroog euskara: Azukre-kanabera فارسی: نیشکر suomi: Sokeriruoko Nordfriisk: Sokerröör galego: Cana de azucre Avañe’ẽ: Takuare’ẽ

hrvatski: Šećerna trska hornjoserbsce: Prawa cokorina Kreyòl ayisyen: Kann հայերեն: Շաքարեղեգ 日本語: サトウキビ ქართული: შაქრის ლერწამი 한국어: 사탕수수 Limburgs: Sókkerreet македонски: шеќерна трска кырык мары: Сакыр шуды Nederlands: Suikerriet norsk nynorsk: Sukkerrøyr ирон: Сæкæры хъæз polski: Cukrowiec lekarski, Trzcina cukrowa pinayuanan: tjevus Runa Simi: Misk’i wiru română: Trestie de zahăr русский: Сахарный тростник ᱥᱟᱱᱛᱟᱲᱤ: ᱟᱸᱠ slovenčina: Cukrová trstina slovenščina: Sladkorni trs shqip: Kallam Sheqeri svenska: Sockerrör தமிழ்: செங்கரும்பு తెలుగు: సెకారం అఫిష్ననారమ్ ไทย: อ้อย lea faka-Tonga: Tō Türkçe: Şeker kamışı reo tahiti: Tō українська: цукровий тросник 粵語: 蔗 中文: 秀貴甘蔗 中文(臺灣): 秀貴甘蔗

கரும்பு
கரும்பு

3. ஆங்கிலம்

Saccharum officinarum, Linn.,

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

சொல்ல பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
கொல்ல பயன்படும் கீழ் - குறள் 108:8

கரும்பில் கொண்ட தேனும் பெரும் துறை - புறம் 42/15

அறை கரும்பின் அரி நெல்லின் - பொரு 193

கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின் - பெரும் 262

கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை - மது 258

கார் கரும்பின் கமழ் ஆலை - பட் 9

உரு கெழு கரும்பின் ஒண் பூ போல - பட் 162

கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும் - மலை 341

இரும் பன் மெல் அணை ஒழிய கரும்பின்/வேல் போல் வெண் முகை விரிய தீண்டி - நற் 366/7,8

கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ - குறு 35/3

தேம் பொதி கொண்ட தீம் கழை கரும்பின்/நாறா வெண் பூ கொழுதும் - குறு 85/4,5

வான் பூ கரும்பின் ஓங்கு மணல் சிறு சிறை - குறு 149/3

அறை மடி கரும்பின் கண் இடை அன்ன - குறு 180/3

ஒருங்கு உடன் இயைவது ஆயினும் கரும்பின்/கால் எறி கடிகை கண் அயின்று அன்ன - குறு 267/2,3

பூத்த கரும்பின் காய்த்த நெல்லின் - ஐங் 4/4

கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும் - ஐங் 12/1

கரும்பின் அலமரும் கழனி ஊரன் - ஐங் 18/2

கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும் - ஐங் 55/1

கரும்பின் பாத்தி பூத்த நெய்தல் - பதி 13/3

விரி பூ கரும்பின் கழனி புல்லென - பதி 13/13

அறை-உறு கரும்பின் தீம் சேற்று யாணர் - பதி 75/6

ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள் - பரி 7/55

தீம் கண் கரும்பின் கழை வாங்கும் உற்றாரின் - கலி 40/28

இலங்கு பூம் கரும்பின் ஏர் கழை இருந்த - அகம் 13/22

நீடு கழை கரும்பின் கணை கால் வான் பூ - அகம் 217/4

கிளை விரி கரும்பின் கணை கால் வான் பூ - அகம் 235/12

இரும் கதிர் அலமரும் கழனி கரும்பின்/விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு - அகம் 237/11,12

கழனி கரும்பின் சாய் புறம் ஊர்ந்து - அகம் 306/6

மென் கழை கரும்பின் நன் பல மிடைந்து - அகம் 346/7

ஆய் கரும்பின் கொடி கூரை - புறம் 22/15

பூ கரும்பின் தீம் சாறும் - புறம் 24/13

புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரை - புறம் 28/12

ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் - புறம் 35/10

கழை கரும்பின் ஒலிக்குந்து - புறம் 137/6

கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது - புறம் 322/7

அறை கரும்பின் பூ அருந்தும் - புறம் 384/3

வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின்/பாத்தி பன் மலர் பூ ததும்பின - புறம் 386/10,11

ஒய்யும் நீர் வழி கரும்பினும்/பல் வேல் பொறையன் வல்லனால் அளியே - பதி 87/4,5

கரும்பு உடை தோளும் உடையவால் அணங்கே - நற் 39/11

கரும்பு உடை பணை தோள் நோக்கியும் ஒரு திறம் - நற் 298/7

கரும்பு மருள் முதல பைம் தாள் செந்தினை - குறு 198/2

கரும்பு நடு பாத்தி அன்ன - குறு 262/7

உழுந்து உடை கழுந்தின் கரும்பு உடை பணை தோள் - குறு 384/1

கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல் - ஐங் 65/1

கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும் - ஐங் 87/2

காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது - பதி 30/14

கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய - பதி 50/3

கரும்பு கவழம் மடுப்பார் நிரந்து - பரி 19/34

கரும்பு கருமுக கணக்கு அளிப்போரும் - பரி 19/39

கரும்பு எழுது தொய்யிற்கு செல்வல் ஈங்கு ஆக - கலி 63/8

கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ ஒருங்கே - கலி 64/14

தெரி வேய் தோள் கரும்பு எழுதி தொய்யில் செய்தனைத்தற்கோ - கலி 76/15

நடாஅ கரும்பு அமன்ற தோளாரை காணின் - கலி 112/6

அன்று தான் ஈர்த்த கரும்பு அணி வாட என் - கலி 131/29

பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் இள முலை மேல் - கலி 143/32

ஆய் கரும்பு அடுக்கும் பாய் புனல் ஊர - அகம் 116/4

காஞ்சியின் அகத்து கரும்பு அருத்தி யாக்கும் - அகம் 156/6

கரும்பு அமல் படப்பை பெரும் பெயர் கள்ளூர் - அகம் 256/15

கரும்பு என கவினிய பெரும் குரல் ஏனல் - அகம் 302/10

கரும்பு அல்லது காடு அறியா - புறம் 16/15

அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் - புறம் 99/2

கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே - புறம் 392/21

எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு - கலி 64/19

ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே/புயல் புனிறு போகிய பூ மலி புறவின் - மலை 119,120

ஓங்கு நிலை கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த - முல் 32

வெண் பூ கரும்பொடு செந்நெல் நீடி - பட் 240

தீம் கரும்போடு அவல் வகுத்தோர் - பொரு 216

பெரும் பொய் உரையாதி பாண கரும்பின்
கடை கண் அனையம் யாம் ஊரற்கு அதனால் - நாலடி:39 10/2,3

கரும்பின் கோது ஆயினேம் யாம் - திணை50:39/4

கடித்து கரும்பினை கண் தகர நூறி - நாலடி:16 6/1

சிறை இல் கரும்பினை காத்து ஓம்பல் இன்னா - இன்னா40:5/1

பெரும் பயனும் ஆற்றவே கொள்க கரும்பு ஊர்ந்த - நாலடி:4 4/2

கரும்பு ஆட்டி கட்டி சிறு காலை கொண்டார் - நாலடி:4 5/1

கரும்பு ஆர் கழனியுள் சேர்வர் சுரும்பு ஆர்க்கும் - நாலடி:13 2/2

நுனியின் கரும்பு தின்று அற்றே நுனி நீக்கி - நாலடி:14 8/2

தீம் கரும்பு ஈன்ற திரள் கால் உளை அலரி - நாலடி:20 9/1

குருத்தின் கரும்பு தின்று அற்றே குருத்திற்கு - நாலடி:22 1/2

இரும் கோட்டு மென் கரும்பு சாடி வரும் கோட்டால் - திணை150:137/2

சென்று ஒசிந்து ஒல்கு நுசுப்பினாய் பைம் கரும்பு
மென்றிருந்து பாகு செயல் - பழ:289/3,4

நிலத்துக்கு அணி என்ப நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணி என்ப தாமரை பெண்மை - நான்மணி:9/1,2
கரும்பு
செங்கரும்பு
கரும்பில் தொடுத்த பெரும் தேன் சிதைந்து - புகார்:10/82

கழனி செந்நெல் கரும்பு சூழ் மருங்கின் - புகார்:10/112

தீம் கரும்பு நல் உலக்கை ஆக செழு முத்தம் - வஞ்சி:29/177

கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி - புகார்:2/29

ஐவன வெண்ணெலும் அறை கண் கரும்பும்
   கொய் பூம் தினையும் கொழும் புன வரகும் - மது: 11/80,81

காயமும் கரும்பும் பூ மலி கொடியும் - வஞ்சி:25/45

காசு அறு விரையே கரும்பே தேனே - புகார்:2/74

கரும்பு உடை தட கை காமன் கையற - மணி:23/27

பூ கொடி வல்லியும் கரும்பும் நடு-மின் - மணி:1/47

நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் - மணி:6/41

கரும்பார் தீம் சொல்லினாய் காணார்-கால் கேள்வர் - சிந்தா:3 734/4

வயல் வளர் கரும்பில் பாயும் மகதநாடு என்பது உண்டே - சிந்தா:13 3042/4

நீள் கழை கரும்பின் நெற்றி நெய்ம் முதிர் தொடையல் கீறி - சிந்தா:5 1198/2

ஆலை கரும்பின் அக நாடு அணைந்தான் - சிந்தா:7 1613/4

கரும்பின் மேல் தொடுத்த தேன் கலி கொள் தாமரை - சிந்தா:8 1936/1

வேய் நிற கரும்பின் வெண் நிற பூ போல் மிடைந்து ஒளிர் குந்தமும் வாளும் - சிந்தா:10 2158/1

கணை நிலை கரும்பினில் கவரும் பண்டியும் - சிந்தா:1 61/3

தேன் கண கரும்பு இயல் காடும் செந்நெலின் - சிந்தா:1 54/2

கரும்பு கண் உடைப்பவர் ஆலை-தோறெலாம் - சிந்தா:1 60/1

கரும்பு ஆர் தோள் முத்தம் கழன்று செ வாய் விளர்த்து கண் பசலை பூத்த காமம் - சிந்தா:1 231/1

கரும்பு உடை காளை அன்ன காளை நின் வலைப்பட்டு என்றான் - சிந்தா:1 401/4

தீம் கரும்பு எருத்தில் தூங்கி ஈ இன்றி இருந்த தீம் தேன் - சிந்தா:3 712/1

கழை முற்று தீம் தேன் கரும்பு ஆர் வயல் ஐந்து மூதூர் - சிந்தா:4 1064/3

கரும்பு எறி கடிகையோடு நெய் மலி கவளம் கொள்ளாது - சிந்தா:4 1076/2

கொண்டு உலப்ப அரிய செந்நெல் கொடி கரும்பு உடுத்த வேலி - சிந்தா:5 1184/3

கை வளர் கரும்பு உடை கடவுள் ஆம் எனின் - சிந்தா:5 1263/1

கரும்பு அணி வள வயல் காமர் தாமரை - சிந்தா:6 1442/1

கழை கரும்பு எறிந்து கண் உடைக்கும் எந்திரம் - சிந்தா:7 1614/2

தீம் கரும்பு அனுக்கிய திருந்து தோள்களும் - சிந்தா:8 1942/1

தீம் கரும்பு மென்று அனைய இன் பவள செ வாய் - சிந்தா:9 2034/3

மா மணி மகரம் அம்பு வண் சிலை கரும்பு மான் தேர் - சிந்தா:9 2057/3

கள் நக்க கண்ணி கமழ் பூம் குழல் கரும்பு ஏர் தீம் சொலாள் கதிர் முலைகளின் - சிந்தா:9 2066/1

காய் தெங்கு சூழ்ந்த கரும்பு ஆர் தம் பதிகள் புக்கார் - சிந்தா:11 2348/3

கரும்பு அலால் காடு ஒன்று இல்லா கழனி சூழ் பழன நாடும் - சிந்தா:13 2902/1

கரும்பு என திரண்ட தோள் கால வேல் கணீர் - சிந்தா:13 2935/4

தூம்பு ஆர் நெடும் கைம்மா தீம் கரும்பு துற்றாவாய் - சிந்தா:13 2980/2

கரும்பு எறி கடிகை போன்றும் கதலிகை போழ்கள் போன்றும் - சிந்தா:13 3078/1

வீணையும் குழலும் பாலும் அமுதமும் கரும்பும் தேனும் - சிந்தா:6 1500/1

அருவி ஐவனம் கரும்பும் அடக்கரும் கவை கதிர் வரகும் - சிந்தா:7 1561/3

கரும்பும் தேனும் அமிழ்தும் பாலும் கலந்த தீம் சொல் மடவாட்கு - சிந்தா:12 2438/1

கரும்பே தேனே அமிர்தே காமர் மணி யாழே - சிந்தா:12 2453/1

கவழம் ஆர் களிறு போன்றான் காதலி கரும்பை ஒத்தாள் - சிந்தா:1 191/2

கடி நல கரும்பொடு காய் நெல் கற்றையின் - சிந்தா:1 81/1

நெட்டு இரும் கரும்பொடு செந்நெல் மேய்ந்து நீர் - சிந்தா:8 1938/3

கரும்பொடு காய் நெல் துற்றி கருப்புர கந்தில் நின்ற - சிந்தா:12 2522/2
உடை கரும்பின் சுவையினும் இனிய கட்டுரை நெறி கலிமாவை - சீறா:1448/2

ஆலை வாய்-தொறும் கரும்பு உடைத்து ஆறு எடுத்து ஓடும் - சீறா:74/3

கரும்பு எனும் மொழி அனார் காளைமாருடன் - சீறா:315/3

கனி பல அருந்தி துண்ட கரும்பு அடு சாறு தேக்கி - சீறா:806/1

நெடிய பச்சிலை கரும்பு உடை கழனியும் நிறைந்த - சீறா:858/3

தறித்த பூம் கரும்பு ஆட்டு சாறு அடு புகை தயங்கி - சீறா:864/2

கரும்பு என தோன்றி செம்பொன் கதிர் உமிழ்ந்திருந்த கொம்பே - சீறா:1043/1

பூ நறும் கரும்பு என பொருவு இல் மாதரார் - சீறா:1152/3

கரும்பு எனும் அமுத தீம் சொல் கன்னியர் செறிந்த தோற்றம் - சீறா:1168/2

கரும்பு எனும் நபி கலிமாவை காமுற - சீறா:1318/1

கதிர் மணி கரும்பு இளம் கமுகு அரும் கனி கதலி - சீறா:3124/1

கரும்பு எனும் மொழியாள் ஆசை கவின் முளைத்து என்ன தோட்டு உள் - சீறா:3191/1

கொடி கரும்பு எழுது தோள் மேல் கொழும் மணி கோவை சேர்த்தார் - சீறா:3213/4

புடைபடும் கதலி சூழல் பூம் கரும்பு அடவி மாய - சீறா:3381/3

கரும்பு அடைகிடக்கும் தீம் சொல் கதி மறை கபீபு அன்பாகி - சீறா:4907/2

கரையிலா உவகை கடலிடை குளித்து கரும்பு எனும் மறை கலிமாவை - சீறா:4916/3

தீம் கரும்பு எருத்தில் தூங்கு தேன் உடைந்து சிதறிடும் பணை புடை சூழும் - சீறா:4923/3

அரும் கரும்பு உடைந்து சாறு எழ கய வாய் அசைத்து அசைபோட்டு கண் துயில - சீறா:5007/3

கடி நறா ஒழுகிட கொடி கரும்புகள் நடுவார் - சீறா:1105/3

கூறு மென் கரும்பே நின்றன் வயிற்று உறு குழந்தை - சீறா:200/2

பேரழகு ஒழுகும் பெண் நலம் கனியை பிரசம் ஊறிய மொழி கரும்பை
ஆரண கடலுக்கு அமுத நாயகியை அரிவையர் முறைமுறை வாழ்த்தி - சீறா:1207/1,2

விரி கதிர் மணி பூண் தாங்கும் மென் கழுத்தாள் வேயினை கரும்பை மெல் அணையை - சீறா:1964/2

கனிந்து இனிது ஒழுகும் பெண்மை கரும்பை தேன் கனியை வாசம் - சீறா:3066/1

ஏறு பாய் ஒலி எருமை நீர் பாய் ஒலி கரும்பின்
சாறு பாய் ஒலி சங்கு ஒலி வயிர் ஒலி மற்ற - தேம்பா:12 46/2,3

காய்ந்த ஆலையின் கரும்பினை முறுக்குதற்கு அளவில் - தேம்பா:6 61/3

இட்டு இரட்டின கரும்பு இன்பு ஈன்ற கள் - தேம்பா:1 27/3

கரும்பு உலாவிய சாறு இல காய்ந்தன ஆலை - தேம்பா:5 15/1

கரும்பு வில் ஏவிய வெம் கணையாய் மனமே கருக - தேம்பா:10 47/2

தேன் இரும் தலை கரும்பு உறழ் ஆடிய செந்நெல் - தேம்பா:12 53/2

கம் உகும் படர் கதலி கனிகள் நக்கும் கரும்பு ஒரு-பால் - தேம்பா:20 16/1

வேய் நிற கரும்பு நக்கும் விரி தலை கதலி ஊழ்த்து - தேம்பா:29 39/1

கரவ நீள் பசும் பூ நெற்றி கரும்புகள் நிறுவி ஊக்கி - தேம்பா:12 13/2
கரும்பு
செங்கரும்பு
கன்னல்அம் கரும்புதான் கமுகை காய்ந்து எழும் - வளையா:70/2

ஆலையில் கரும்பின் கண்களில் தெறித்த ஆரம் அ வயல் புறத்து அடுத்த - வில்லி:6 19/1

தசும்பு உறும் அகிலின் தூபம் சாறு அடு கரும்பின் தூபம் - வில்லி:6 32/1

கள் அவிழ் கூந்தலாளை கரும்பு என விரும்பி கண்டாள் - வில்லி:5 65/4

மாரன் கரும்பு வளரும்படி வார்த்த நீரால் - வில்லி:5 97/1

வண்டு மலர் கரும்பு ஆம் வண்ண படையானை - வில்லி:10 80/1

தரை எலாம் பொன்னும் வெள்ளியும் பழன வேலி சூழ் சாலியும் கரும்பும் - வில்லி:6 18/4
முடி கையினால் தொடும் மோட்டு உழவர் முன்கை தருக்கை கரும்பு இன் கட்டி - தேவா-சம்:50/1

கரும்பு இன்மொழியாளோடு உடன் கை அனல் வீசி - தேவா-சம்:494/2

தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீம் கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார் - தேவா-சம்:832/1

கழை ஆர் கரும்பு கண்வளர் சோலை கலி காழி - தேவா-சம்:1106/2

கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே - தேவா-சம்:1368/4

கரும் சகடம் இளக வளர் கரும்பு இரிய அகம் பாயும் கழுமலமே - தேவா-சம்:1388/4

தென்றலார் அடி வருட செழும் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே - தேவா-சம்:1400/4

முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியில் மூழ்கிட இள வாளை - தேவா-சம்:2581/3

கரும்பு கார் மலி கொடி மிடை கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை - தேவா-சம்:2598/3

கலவ மா மயில் ஆர் இயலாள் கரும்பு அன்ன மென்மொழியாள் கதிர் வாள் நுதல் - தேவா-சம்:2821/1

கரும்பு தேன் கட்டியும் கதலியின் கனிகளும் - தேவா-சம்:3184/1

கரும்பு அன வரி சிலை பெருந்தகை காமனை கவின் அழித்த - தேவா-சம்:3770/1

கரும்பு அமர் வில்லியை காய்ந்து காதல் காரிகை-மாட்டு அருளி - தேவா-சம்:3872/1

கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே - தேவா-சம்:4029/4

கறுத்தானை கருதாதே கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்த ஆறே - தேவா-அப்:51/4

கரும்பு கொப்பளித்த இன்சொல் காரிகை பாகம் ஆக - தேவா-அப்:239/2

கரும்பு பிடித்தவர் காயப்பட்டார் அங்கு ஓர் கோடலியால் - தேவா-அப்:990/1

கரும்பு அற்ற சிலை காமனை காய்ந்தவன் - தேவா-அப்:1072/3

கரும்பு ஒப்பானை கரும்பினில் கட்டியை - தேவா-அப்:1093/1

கன்னலை கரும்பு ஊறிய தேறலை - தேவா-அப்:1989/1

கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன்-தன்னை கன வயிர குன்று அனைய காட்சியானை - தேவா-அப்:2091/1

கரும்பு தரு கட்டியை இன் அமிர்தை தேனை காண்பு அரிய செழும் சுடரை கனக குன்றை - தேவா-அப்:2415/2

கரும்பு அனையாள் உமையோடும் கருகாவூரார் கருப்பறியலூரார் கரவீரத்தார் - தேவா-அப்:2599/3

கரும்பு இருந்த கட்டி-தனை கனியை தேனை கன்றாப்பின் நடுதறியை காறையானை - தேவா-அப்:2877/1

கரும்பு ஆர் மொழி கன்னியர் ஆடும் துறையூர் - தேவா-சுந்:126/3

கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும் கழனி கமலங்கள் முகம் மலரும் கயலநல்லூர் காணே - தேவா-சுந்:156/4

கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில் - தேவா-சுந்:164/2

கரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி தூங்கு கண்ணீர் - தேவா-சுந்:232/1

கரும்பு ஆரும் கழனி கழிப்பாலை மேயானே - தேவா-சுந்:232/4

கரும்பு ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற - தேவா-சுந்:277/3

மடை எலாம் கழுநீர் மலர்ந்து மருங்கு எலாம் கரும்பு ஆட தேன் - தேவா-சுந்:356/3

கரும்பு உயர்ந்து பெரும் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே - தேவா-சுந்:406/4

வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர் - தேவா-சுந்:468/1

கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர் கண்டு நாம் பணியா விடல் ஆமே - தேவா-சுந்:576/4

குருகு பாய கொழும் கரும்புகள் நெரிந்த சாறு - தேவா-சுந்:372/1

மாம் கரும்பும் வயல் மயேந்திரப்பள்ளியுள் - தேவா-சம்:3131/3

கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம் - தேவா-சம்:3331/3

கழை கொள் கரும்பும் கதலி கனியும் கமுகின் பழுக்காயும் கவர்ந்து கொண்டு இட்டு - தேவா-சுந்:91/3

கழை கரும்பும் கதலி பல சோலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே - தேவா-சுந்:596/4

கரும்பே என் கட்டி என்று உள்ளத்தால் உள்கி காதல் சேர் மாதராள் கங்கையாள் நங்கை - தேவா-சுந்:385/2

கருகல் குரலாய் வெண்ணி கரும்பே கானூர் கட்டியே - தேவா-சுந்:482/3

கங்கை தங்கிய சடை உடை கரும்பே கட்டியே பலர்க்கும் களைகண்ணே - தேவா-சுந்:552/1

கண்டத்தில் தீதின் நஞ்சு அமுதுசெய்து கண் மூன்று படைத்தது ஒரு கரும்பை பாலை - தேவா-அப்:2352/3

அ தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்கும் தீம் கரும்பை அரனை ஆதி - தேவா-அப்:2628/3

தீம் கரும்பை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே - தேவா-அப்:2769/4

கோடரம் பயில் சடை உடை கரும்பை கோலக்காவுள் எம்மானை மெய் மான - தேவா-சுந்:644/1

கரும்பொடு படும் சொலின் மடந்தையை மகிழ்ந்தோய் - தேவா-சம்:1790/2

ஆலை கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த - தேவா-அப்:826/3

கரும்பு தரு சுவை எனக்கு காட்டினை உன் கழல்_இணைகள் - திருவா:38 1/2

கண் அகத்தே நின்று களி தரு தேனே கடல் அமுதே கரும்பே விரும்பு அடியார் - திருவா:20 9/3

கரும்பு அன மென் மொழியாரும் அ நீர்மையர் காணுநர்க்கே - திருக்கோ:248/4

கடுத்து அணி காமர் கரும்பு உருவ சிலை கண் மலர் அம்பு - திருக்கோ:352/3

கரும்பு உறை ஊரன் கலந்து அகன்றான் என்று கண்மணியும் - திருக்கோ:353/3

தீம் கரும்பும் அமிழ்தும் செழும் தேனும் பொதிந்து செப்பும் - திருக்கோ:46/3

காலினில் ஊறும் கரும்பினில் கட்டியும் - திருமந்:2639/1

கரும்பு தகர்த்து கடைக்கொண்ட நீர் போல் - திருமந்:180/2

கரும்பு ஒத்து காஞ்சிரம் காயும் ஒத்தேனே - திருமந்:180/4

கையகத்தே கரும்பு ஆலையின் சாறு கொள் - திருமந்:207/3

தேவினை ஆடிய தீம் கரும்பு ஆமே - திருமந்:807/4

தீம் கரும்பு ஆகவே செய் தொழில் உள்ளவர் - திருமந்:808/1

ஆம் கரும்பு ஆக அடைய நாவு ஏறிட்டு - திருமந்:808/2

ஊன் கரும்பு ஆகியே ஊன் நீர் வருமே - திருமந்:808/4

ஆர்த்திடும் அங்குச பாசம் பசும் கரும்பு
ஆர்த்திடும் பூம்பிள்ளை ஆகுமாம் ஆதிக்கே - திருமந்:1068/3,4

சேயன் அணியன் தித்திக்கும் தீம் கரும்பு
ஆய அமுதாகி நின்று அண்ணிக்கின்றானே - திருமந்:2365/3,4

ஆலை கரும்பும் அமுதும் அக்காரமும் - திருமந்:2959/1

கரும்பும் தேனும் கலந்த ஓர் காயத்தில் - திருமந்:2976/1

கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே - திருமந்:2976/4

கமுகு ஊறு தெங்கு கரும்பொடு வாழை - திருமந்:248/3

வாரி சொரியும் கதிர் முத்தும் வயல் மென் கரும்பில் படு முத்தும் - 2.தில்லை:6 2/1

கால் ஆறு வயல் கரும்பின் கமழ் சாறூர் கஞ்சாறூர் - 3.இலை:5 1/4

நீற்று அலர் பேர் ஒளி நெருங்கும் அ பதியின் நிறை கரும்பின்
சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழ பகட்டு ஏர் - 4.மும்மை:4 2/1,2

செந்நெல் ஆர் வயல் தீம் கரும்பின் அயல் - 5.திருநின்ற:2 1/2

துணர் இணர் சோலையும் சாலி வேலி துறை நீர் பழனமும் சூழ் கரும்பின்
மண மலி கானமும் ஞானமும் உண்டார் மருங்குற நோக்கி மகிழ்ந்து அருளி - 6.வம்பறா:1 498/1,2

செந்நெல்லும் பொன் அன்ன செழும் பருப்பும் தீம் கரும்பின்
இன் நல்ல அமுதும் முதல் எண்_இல் பெரும் வளங்கள் - 6.வம்பறா:2 11/1,2

புடை வளர் மென் கரும்பினொடு பூகம் இடை மழபாடி போற்ற சென்றார் - 6.வம்பறா:1 305/4

வேழ கரும்பினோடு மென் கரும்பு தண் வயலில் - 3.இலை:2 2/1

கரும்பு அல்ல நெல் என்ன கமுகு அல்ல கரும்பு என்ன - 1.திருமலை:2 15/1

கரும்பு அல்ல நெல் என்ன கமுகு அல்ல கரும்பு என்ன - 1.திருமலை:2 15/1

காடு எல்லாம் கழை கரும்பு கா எல்லாம் குழைக்கு அரும்பு - 1.திருமலை:2 17/1

கரும்பு அடு களமர் ஆலை கமழ் நறும் புகையோ மாதர் - 1.திருமலை:2 27/1

வேழ கரும்பினோடு மென் கரும்பு தண் வயலில் - 3.இலை:2 2/1

கரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட - 3.இலை:6 1/2

கரும்பு தேன் பொழியும் கணமங்கலம் - 3.இலை:6 1/4

ஓங்கு செந்நெலின் புடையன உயர் கழை கரும்பு
பூம் கரும்பு அயல் மிடைவன பூகம் அ பூக - 4.மும்மை:5 27/1,2

பூம் கரும்பு அயல் மிடைவன பூகம் அ பூக - 4.மும்மை:5 27/2

கால் எல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன் - 5.திருநின்ற:1 4/1

கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு - 5.திருநின்ற:1 5/1

உடை மடைய கரும்பு அடு கட்டியின் அடைப்ப ஊர்கள்-தொறும் - 5.திருநின்ற:1 5/4

புள் உடை தடம் பழனமும் படு கரும்பு உடை கழிந்திட போந்து - 6.வம்பறா:1 145/3

கரும்பு செந்நெல் பைம் கமுகொடு கலந்து உயர் கழனி அம் பணை நீங்கி - 6.வம்பறா:1 153/1

கண் வளர் மென் கரும்பு மிடை கதிர் செம் சாலி கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டு - 6.வம்பறா:1 256/3

செய் தரு சாலி கரும்பு தெங்கு பைம் பூகத்திடை போய் - 6.வம்பறா:1 296/2

சங்கங்கள் வயல் எங்கும் சாலி கழை கரும்பு எங்கும் - 6.வம்பறா:1 626/1

கரும்பு ஆர் கழனி திருநாவலூரில் சைவ கலை மறையோர் - 12.மன்னிய:5 12/2

மெய் கொண்ட காதலினால் விரைந்து ஏகி மென் கரும்பும்
   செய் கொண்ட சாலியும் சூழ் திருவாரூர் சென்று அணைந்தார் - 7.வார்கொண்ட:4 172/3,4

காம்பினில் திகழ் கரும்பொடு செந்நெலின் கழனி அம்பணை நீங்கி - 6.வம்பறா:1 538/3

ஆலை கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய் உன் மகனை கூவாய் - நாலாயி:206/4

கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி கழுநீரில் மூழ்கி செழு நீர் தடத்து - நாலாயி:1223/3

தேனே தீம் கரும்பின் தெளிவே என் சிந்தை-தன்னால் - நாலாயி:1566/3

கரும்பின் இன் சாறு போல பருகினேற்கு இனியவாறே - நாலாயி:2036/4

தேனிடை கரும்பின் சாற்றை திருவினை மருவி வாழார் - நாலாயி:2039/2

கனியை கரும்பின் இன் சாற்றை கட்டியை தேனை அமுதை - நாலாயி:3170/3

கன்னலை கரும்பினிடை தேறலை கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே - நாலாயி:1639/4

கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு கழனியில் மலி வாவி - நாலாயி:1261/3

கரும்பினை கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே - நாலாயி:888/4

சீரானை எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை
  போர் ஆனை கொம்பு ஒசித்த போர் ஏற்றினை புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை - நாலாயி:1088/2,3

தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தைசெய்யாதே - நாலாயி:1572/4

கரும்பினை கனியை சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே - நாலாயி:1638/4

கரும்பினை கண்டுகொண்டு என் கண் இணை களிக்குமாறே - நாலாயி:2044/4

கரும்பு ஆர் நீள் வயல் காய் கதிர் செந்நெலை கற்று ஆநிரை மண்டி தின்ன - நாலாயி:228/1

காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து கட்டி அரிசி அவல் அமைத்து - நாலாயி:510/1

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ அம்புய தடம் கண்ணினன் தாலோ - நாலாயி:708/1

கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே - நாலாயி:844/3

தீம் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே - நாலாயி:1141/4

சாறு கொண்ட மென் கரும்பு இளம் கழை தகை விசும்பு உற மணி நீழல் - நாலாயி:1151/3

செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ அரிவார் முகத்து எழு வாளை போய் கரும்பு
அ நல் நாடு அணையும் அணி ஆலி அம்மானே - நாலாயி:1190/3,4

இளம்படி நல் கமுகு குலை தெங்கு கொடி செந்நெல் ஈன் கரும்பு கண்வளர கால் தடவும் புனலால் - நாலாயி:1234/3

கான மா முல்லை கழை கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற - நாலாயி:1372/3

பார் தழைத்து கரும்பு ஓங்கி பயன் விளைக்கும் திருநறையூர் - நாலாயி:1534/2

கட்டியை கரும்பு ஈன்ற இன் சாற்றை காதலால் மறை நான்கும் முன் ஓதிய - நாலாயி:1573/3

கட்டியை தேனை அமுதை நன் பாலை கனியை கரும்பு-தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி அவன் திறத்து - நாலாயி:3222/2,3

சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி தண் சிரீவரமங்கை - நாலாயி:3416/3

ஆடு உறு தீம் கரும்பும் விளை செந்நெலும் ஆகி எங்கும் - நாலாயி:3436/2

வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும் வயல் சூழ் திருவாறன்விளை - நாலாயி:3663/2

ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து - நாலாயி:3762/1

கள்வா கடல்மல்லை கிடந்த கரும்பே
வள்ளால் உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே - நாலாயி:1551/3,4

கடி உடை கமலம் அடியிடை மலர கரும்பொடு பெரும் செந்நெல் அசைய - நாலாயி:1346/3

செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக்குருகூர்-அதனுள் - நாலாயி:3339/3

நோக்கும் பக்கம் எல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை - நாலாயி:3500/1

எண் திசையும் ஈன் கரும்பொடு பெரும் செந்நெல் விளைய - நாலாயி:3895/3

மாதர் கோகிலம் போல் கரும்பான மொழி தோகை வாகர் கண்டாரை கொண்டாடி தகை - திருப்:80/5

குல கரும்பின் சொல் தத்தை இப பெண்தனக்கு வஞ்சம் சொல் பொச்சை இடை - திருப்:16/11

குற கரும்பின் மெய் துவள் புயன் என வரு வடி வேலா - திருப்:19/10

மாலால் உழன்று அணங்கை ஆர் மா மதன் கரும்பின் வாகோடு அழிந்து ஒடுங்க முதல் நாடி - திருப்:667/5

கருணாஞ்சன கமல விழி பொன் பைம் புன கரும்பின் மணவாளா - திருப்:718/6

அரும்பினால் தனி கரும்பினால் தொடுத்து அடர்ந்து மேல் தெறித்து அமராடும் - திருப்:1208/1

சந்து அடர்ந்து எழுந்து அரும்பு மந்தரம் செழும் கரும்பு கந்த ரம்பை செண் பதம் கொள் செந்தில் வாழ்வே - திருப்:97/5

புருகூதன் உள் குளிர்ந்த கனகாபுரி ப்ரசண்ட புனிதா ம்ருக கரும்பு புணர் மார்பா - திருப்:238/6

தரி கரும்பு ஒக்க தக்க மொழி சுந்தரி அரும்பி கப்பித்த தனத்து அந்தரி - திருப்:313/11

பெறு கரும்பு அ தக்கது அருள் நல் பங்கய வாவி - திருப்:315/12

நாத வடிவி அகிலம் பரந்தவள் ஆலின் உதரம் உள பைம் கரும்பு வெண் - திருப்:359/15

கரும்பு உற்ற வயல் சூழ பெரும்பற்ற புலியூரில் களம் பற்றி நடமாடும் அரன் வாழ்வே - திருப்:488/6

கொழும் காவின் மலர் பொழிலில் கரும்பு ஆலை புணர்க்கும் இசை குரங்காடுதுறை குமர பெருமாளே - திருப்:879/8

கரும்பு அமுது முலை குரும்பை குருகு பகரும் பிடியின் நடை எயின் மாதோடு - திருப்:971/2

முன்னாய் மதன் கரும்பு வில் நேர் தடம் தெரிந்து முன் ஓர் பொருகை என்று முனை ஆட - திருப்:989/7

இரு குழை தத்தி புரண்டு வந்த ஒரு குமிழையும் எற்றி கரும்பு எனும் சிலை - திருப்:1012/3

ஆகம் மீதிலே சிவந்து ஊசி தானுமே நுழைந்து ஆலை மீதிலே கரும்பு எனவே தான் - திருப்:1169/2

பழம் பெரும் தித்திப்பு உறும் கரும்பு அப்பத்துடன் பெரும் கைக்குள் பட வாரி - திருப்:1223/5

மா தண் ஆரு வனம் குயில் கொஞ்சிட தேங்கு வாழை கரும்புகள் விஞ்சிடு - திருப்:475/13

பெரும் பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய பெருங்குடி மருங்கு உறை பெருமாளே - திருப்:700/8

இசை முரல் சுரும்பும் இள முலை அரும்பும் இலகிய கரும்பும் மயலாலே - திருப்:120/2

பாக்கு கரும்பை கெண்டை தாக்கி தடம் படிந்த பாக்கத்து அமர்ந்திருந்த பெருமாளே - திருப்:679/8

புரக்க வந்த நம் குற கரும்பை மென் புனத்தில் அன்று சென்று உறவாடி - திருப்:1070/1

பாகு நல் கரும்போடு சர்க்கரையின் மொழி மாதர் - திருப்:781/4

கரும்போர்க்கு அரும் போர் குளம் காட்டி கண்டு ஏத்து செங்கோட்டில் நிற்கும் கதிர் வேலா - திருப்:589/6

அறையுறு கரும்பின் அணி மடல் தொடுத்த - உஞ்ஞை:48/146

கரும்பின் ஊறலும் பெரும் பொதி தேனும் - இலாவாண:2/182

கயம் மூழ்கு எருமை கழை வளர் கரும்பின்
விண்ட இள மடல் முருக்கி தண்டாது - மகத:2/16,17

இன் தீம் கரும்பினை சுருக்கியும் விண் தலை - மகத:15/7

கரும் கால் புன்னையொடு இரும் கரும்பு உடுத்து - உஞ்ஞை:40/108

கரும்பு அடு தீம் சொல் காஞ்சனை எழீஇ - உஞ்ஞை:53/8

கரும்பு உலை வெந்த கன்னல் துழவையும் - இலாவாண:3/41

கரும்பு உடை செல்வன் விரும்புபு தோன்றி - மகத:6/68

கரும்பு ஏர் கிளவி கதிர் முகை முறுவல் - மகத:14/132

ஆலை கரும்பும் அரியுறு செந்நெலும் - உஞ்ஞை:39/60

ஐவன நெல்லும் கை வளர் கரும்பும்
கருந்தினை குரலும் பெருந்தினை பிறங்கலும் - உஞ்ஞை:51/21,22

கரும்பும் இஞ்சியும் ஒருங்கு உடன் நிரைத்து - இலாவாண:1/4

தேனிடை கரும்பில் பாலில் அமுதினில் கிளவி தேடி - யுத்2:19 283/1

ஆலைவாய் கரும்பின் தேனும் அரி தலை பாளை தேனும் - பால:2 9/1

வண்ண வாய் குவளை வாள் கண் மருங்கு இலா கரும்பின் அன்னார் - பால:18 7/2

தழை உறா கரும்பின் சாபத்து அனங்க வேள் சரங்கள் பாய்ந்த - பால:21 9/2

அந்தர வானத்து அரம்பையர் கரும்பின் பாடலார் அருகு வந்து ஆட - சுந்:3 86/4

தீம் கரும்பினும் தித்திக்கும் இன்_சொலார் - பால:21 49/1

கரும்பினும் இனிய சொல்லார் சித்தர் தம் கன்னிமார்கள் - யுத்3:25 2/3

கரும்பு எலாம் செந்தேன் சந்த கா எலாம் களி வண்டு ஈட்டம் - பால:2 2/4

கரும்பு கால் பொர கழனி வார்ந்த தேன் - பால:6 23/1

கரும்பு பாண் செய தோகை நின்று ஆடுவ சோலை - பால:9 7/4

அறையும் மென் கரும்பு ஆட்டிய அமுதமும் அழி தேம் - பால:9 10/3

ஆலை மென் கரும்பு_அனான் ஒருவற்கு ஆங்கு ஒரு - பால:19 41/2

கரும்பு அன மொழியினர் கண் பனிக்கிலர் - அயோ:4 169/1

கரும்பு அனைய செம் சொல் நவில் கன்னியர் துயின்றார் - அயோ:5 11/4

கரும்பு அலர் செந்நெல் அம் கழனி கான நாடு - அயோ:11 113/1

கரும்பு உண்ட சொல் மீள்கிலள் காணுதியால் - ஆரண்:13 18/4

கரும்பு அழி சொல்லியை பகைஞன் கைக்கொள - கிட்:6 25/3

கரும்பு கண்டாலும் மாலை காம்பு கண்டாலும் ஆலி - கிட்:13 44/1

முன்னி ஆடு இடங்களும் கரும்பு மூசு தேன் - கிட்:14 8/3

நிருதர் எந்திரத்து இடு கரும்பு ஆம் என நெரிவார் - சுந்:7 40/3

கரும்பு இயல் சித்தியர் இயக்கர் கன்னியர் - சுந்:12 16/3

ஆகினும் ஆம் அது அன்றேல் கரும்பு என்றே அறையலாமால் - யுத்2:18 215/4

உப்பு தேன் மது ஒண் தயிர் பால் கரும்பு
அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள் - யுத்3:31 135/1,2

ஆலை மென் கரும்பு_அனான் ஒருவற்கு ஆங்கு ஒரு - பால:19 41/2

மிடை பசும் கதிரும் மீனும் மென் தழை கரும்பும் வண்டும் - பால:2 7/3

அந்தம்இல் கரும்பும் தேனும் மிஞிறும் உண்டு அல்குல் விற்கும் - பால:16 21/2

குயிலும் கரும்பும் செழும் தேனும் குழலும் யாழும் கொழும் பாகும் - ஆரண்:14 29/3


செந்நெலும் கரும்பும் கமுகும் செறிந்து - கிட்:15 46/3

கரும்பையும் சுவை கைப்பித்த குதலையர் விளரி - பால-மிகை:9 7/3

கரும்பையும் கடந்த சொல்லாள் கவாற்கு இது கருது கண்டாய் - கிட்:13 36/4

கரும்பையும் சுவை கைப்பித்த சொல்லியர் காமரம் கனி யாழின் - சுந்:2 195/3

கரும்பொடு செந்நெலும் கவின் கொண்டு ஓங்கிட - பால:5 44/2

கரும்பொடு செந்நெல் காடும் கமல வாவிகளும் மல்கி - கிட்:15 31/2

கொங்கை இள நீரா குளிர்ந்த இளம் சொல் கரும்பால்
பொங்கு சுழி என்னும் பூம் தடத்தில் மங்கை நறும் - நள:51/1,2

கரும்பு ஒடியா மள்ளர் கடா அடிக்கும் நாடா - நள:222/3

மேதி குலம் ஏறி மென் கரும்பை கோதி - நள:31/2

என்ன போய் வீழ்ந்தாள் இன மேதி மெல் கரும்பை
தின்ன போம் நாடன் திரு - நள:290/3,4

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *