Skip to content

கோவலூர் என்பது திருக்கோவலூர்

1. சொல் பொருள்

திருக்கோவலூர்

2. சொல் பொருள் விளக்கம்

கடையெழு வள்ளல்களில் ஒருவனான காரி சங்ககாலத்தில் இவ்வூரை ஆண்ட மன்னர்களில் ஒருவன்.
கோவலூரில் பாயும் ஆறு பெண்ணை அதியமான் நெடுமான் அஞ்சி இந்தக் கோவலூரைப் போரிட்டு அழித்தான் என்றும், அந்த வெற்றியைப் புலவர் பரணன் சிறப்பித்துப் பாடினார் என்றும் ஔவையார் குறிப்பிடுகிறார் (புறநானூறு 99)

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a city called thirukovalur

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முரண் மிகு கோவலூர் நூறி – புறம் 99/13

மாறுபாடு மிக்க கோவலூரை அழித்து வென்று

குரவம் ஏறி வண்டு இனம் குழலொடு யாழ்செய் கோவலூர்
  விரவி நாறு கொன்றையான் வீரட்டானம் சேர்துமே - தேவா-சம்:2551/3,4
பனைகள் உலவு பைம் பொழில் பழனம் சூழ்ந்த கோவலூர்
  வினையை வென்ற வேடத்தான் வீரட்டானம் சேர்துமே - தேவா-சம்:2553/3,4
வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர்
  விளங்கு கோவணத்தினான் வீரட்டானம் சேர்துமே - தேவா-சம்:2554/3,4
வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர்
  விரை கொள் சீர் வெண்நீற்றினான் வீரட்டானம் சேர்துமே - தேவா-சம்:2556/3,4
கோவலூர் குடவாயில் கொடுமுடி - தேவா-அப்:1729/3
கொண்டல் உள்ளார் கொண்டீச்சரத்தின் உள்ளார் கோவலூர் வீரட்டம் கோயில்கொண்டார் - தேவா-அப்:2602/1
கூழை ஏறு உகந்தான் இடம்கொண்டதும் கோவலூர்
  தாழையூர் தகட்டூர் தக்களூர் தருமபுரம் - தேவா-சுந்:112/2,3

பொறி கொள் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனில்
  வெறி கொள் கங்கை தாங்கினான் வீரட்டானம் சேர்துமே - தேவா-சம்:2559/3,4
அழிவிலீர் கொண்டு ஏத்து-மின் அம் தண் கோவலூர்-தனில்
  விழி கொள் பூத படையினான் வீரட்டானம் சேர்துமே - தேவா-சம்:2560/3,4

குடை கொள் வேந்தன் மூதாதை குழகன் கோவலூர்-தனுள்
  விடை அது ஏறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே - தேவா-சம்:2550/3,4
கொள்ள பாடு கீதத்தான் குழகன் கோவலூர்-தனுள்
  வெள்ளம் தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே - தேவா-சம்:2552/3,4
கூடி நின்று பைம் பொழில் குழகன் கோவலூர்-தனுள்
  வீடு காட்டும் நெறியினான் வீரட்டானம் சேர்துமே - தேவா-சம்:2555/3,4
போதில் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனுள்
  வேதம் ஓது நெறியினான் வீரட்டானம் சேர்துமே - தேவா-சம்:2557/3,4
பட்ட மேனியான் குழகன் கோவலூர்-தனுள்
  நீறு பட்ட கோலத்தான் நீல_கண்டன் இருவர்க்கும் - தேவா-சம்:2558/2,3


புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலி பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே - நாலாயி:2057/4
பொற்பு உடைய மலை அரையன் பணிய நின்ற பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே - நாலாயி:2058/4
தண்காலும் தண் குடந்தை நகரும் பாடி தண் கோவலூர் பாடி ஆட கேட்டு - நாலாயி:2068/3
முன் இ உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் - நாலாயி:2775/4

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *