சொல் பொருள்
கொடுங்கோல்
சொல் பொருள் விளக்கம்
கொடுங்கோல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Rod of tyranny
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அடங்கா தானை வேந்தர் உடங்கு இயைந்து என்னொடு பொருதும் என்ப அவரை ஆர் அமர் அலற தாக்கி தேரோடு அவர் புறங்காணேன் ஆயின் ——– ———————- —————— அறன் நிலை திரியா அன்பின் அவையத்து திறன் இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து மெலிகோல் செய்தேன் ஆகுக – புறம் 71/2-9 மிகைத்துச் செல்லும் படையையுடைய வேந்தர், தம்மில் ஒப்பக்கூடி என்னொடு பொருவேம் என்று சொல்லுவர், அவ்வேந்தரைப் பொறுத்தற்கரிய போரின்கண்ணே அலறப் பொருது, தேருடன் அவர் உடைந்து ஓடும் புறக்கொடையைக் கண்டிலேனாயின் ————– ————————— —————————- அறமானது நிலை கலங்காத அன்பினையுடைய அவைக்களத்து அறத்தின் திறப்பாடில்லாத ஒருவனை வைத்து முறை கலங்கிக் கொடுங்கோல் செய்தேன் ஆகுக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்