சொல் பொருள்
அசைபோடு
சொல் பொருள் விளக்கம்
அசைபோடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
chew the cud
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரு திரி மருப்பின் அண்ணல் இரலை செறி இலை பதவின் செம் கோல் மென் குரல் மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும் – அகம் 34/4-8 பெரிய முறுக்குண்ட கொம்புகளையுடைய பெருமை தங்கிய ஆண்மான்கள் செறிவாக அமைந்த இலைகளையுடைய அறுகம்புல்லின் சிவந்த தண்டினோடு மெல்லிய கொத்துக்களை குட்டிகள் விளையாடும் பக்கத்தினையுடைய இளைய பெண்மானை தின்னச்செய்து தெளிவாக அறுத்துக்கொண்டு செல்லும் நீரையொட்டிய நீண்ட மணல்சார்ந்த கரைகளில் அசைபோடும் கதுப்புக்களுடன் துயில்கொள்ளும் இடத்தைக் காத்து நிற்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்